news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews திருச்செந்தூரில் த.வெ.க. நிர்வாகிகள் 15 பேர் மீது வழக்குப்பதிவு
tv

Also Watch

tv

Read this

திருச்செந்தூரில் த.வெ.க. நிர்வாகிகள் 15 பேர் மீது வழக்குப்பதிவு

திருச்செந்தூர், தூத்துக்குடி

9

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
TVK Secret meeting

த.வெ.க. நிர்வாகிகள் 15 பேர் மீது வழக்குப்பதிவு :

திருச்செந்தூர் அமலி நகரில் அனுமதியின்றி ரகசியமாக நடந்த தவெக நிர்வாகிகள் ஆலோசனை கூட்ட வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்த தவெகவை சேர்ந்த இன்ஸ்டா புரோட்டோ பாலுவால், தவக நிர்வாகிகள் 15 பேர் மீது திருச்செந்தூர் தாலுகா காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு.

தமிழக வெற்றி கழகம் தூத்துக்குடி மாவட்ட 6 தொகுதிகளுக்கு சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் ஜே.கே.ஆர். முருகன் தலைமையில், 22ம்தேதி மணப்பாடு சர்ச் மற்றும் திருச்செந்தூர் அமலிநகரில் உள்ள தவெக நிர்வாகி ஜெபிஸ்டன் 28 என்பவரது வீட்டில் தேர்தல் நடத்தை விதியை மீறி அனுமதி இன்றி ரகசியமாக ஆலோசனை கூட்டம் நடத்தியுள்ளனர்.

இதில் பெண்கள் உட்பட சுமார் 20 பேர் கலந்து கொண்டுள்ளனர். இதில் கலந்துகொண்ட தவெக சேர்ந்த இன்ஸ்டா செலிபிரிட்டி புரோட்டா பாலு என்பவர் வீடியோ எடுத்துள்ளார். மேலும் அமலிநகர் சர்ச் முன்பு சிறுவர்களை வைத்து திமுக ஒரு தீய சக்தி என கோஷம் எழுப்பி விசில் அடித்து வீடியோ பதிவு செய்துள்ளார்.

இந்த வீடியோக்களை தனது இன்ஸ்டா பக்கத்திலும் பதிவேற்றியது தொடர்பாக திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் உதவி அலுவலர் வட்டாட்சியர் தங்கமாரி திருச்செந்தூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

புகாரின் பேரில் தாலுகா போலீசார் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஆறு சட்டமன்ற தொகுதிக்கும் தேர்தல் பொறுப்பாளரான ஜே.கே.ஆர். முருகன் உட்பட 15 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Link
சட்டமன்றத் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக பேனர்

சட்டமன்றத் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக பேனர்



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பரபரப்பான சூழலில் பனையூரில் நின்று சொன்ன அமைச்சர் செங்கோட்டையன்..!

3
4 hrs 50 mins agoshare
Sengottayanbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved