Also Watch
Read this
Posted on: Feb 01, 2026 09:31 AM
By: Manigandan Raja

நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே புதூர் பகுதியைச் சேர்ந்த சாந்தி என்பவரது மகன் அரவிந்த்(28) இவர் சாலையோரம் ஜவுளி வியாபாரம் செய்து வருகிறார் .ஆனைகுளம்
மேற்கு தெருவை சேர்ந்த பொன்ராஜ் ,டேவிட் ஆகிய இருவரும் அரவிந்த் நண்பர்கள் என கூறப்படுகிறது.
எனவே 3 பேரும் சேர்ந்து அடிக்கடி கஞ்சா குடிப்பதாக தெரிகிறது . இந்த நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன் வள்ளியூர் பேருந்து நிலையத்தில் வைத்து கஞ்சா குடிக்கும் போது பொன்ராஜ் டேவிட் ஆகியோருக்கும் அரவிந்த்துக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதை மனதில் வைத்து கொண்டு மறுநாள் 28ஆம் தேதி புதூரில் உள்ள அரவிந்த் வீட்டிற்கு சென்ற பொன்ராஜ் மற்றும் டேவிட் இருவரும் அரவிந்தை அவரது தாய் கண் முன்பே அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளனர் .
இதில் அரவிந்தின் மூக்கு கன்னம் தலை ஆகிய பகுதியில் பலத்த வெட்டு காயம் ஏற்பட்டுள்ளது ரத்த வெள்ளத்தில் சரிந்து அவரை அக்கம் பக்கத்துடன் மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையில் சாந்தி அளித்த புகாரின் பேரில் வள்ளியூர் காவல்துறையினர் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் . இதனிடையே வீட்டில் இருந்த அரவிந்தை அவரது நண்பர்கள் அரிவால் கொண்டு தாக்கும் காட்சிகள் அங்கிருந்த ஒருவர் மொபைலில் பதிவு செய்த நிலையில் அந்த காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
மேலும் அரவிந்த் தாயார் அளித்த புகாரின் பேரில் வள்ளி காவல்துறையினர் தாக்குதல் நடத்திய ஆணை குளத்தை சேர்ந்த பொன்ராஜ் மற்றும் விகே புரத்தை சேர்ந்த
டேவிட் ஆகிய இருவரை கைது செய்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved