Also Watch
Read this
By: Web Team

புதுச்சேரியில் மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு சாக்லேட் கொடுத்து, பாலியல் வன்கொடுமை செய்தவனுக்கு வாழ்நாள் முழுவதும் சிறை தண்டனை விதித்து போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2021ல் நடைபெற்ற இச்சம்பவத்தில் காராமணிக்குப்பம் பகுதியை சேர்ந்த பிளம்பர் தொழிலாளி சந்தோஷ் என்பவன், போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டான். இவ்வழக்கில் இறுதி விசாரணை நிறைவடைந்ததை அடுத்து, சந்தோஷுக்கு சாகும் வரை சிறை தண்டனையும், 11 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி சுமதி தீர்ப்பளித்தார்.
மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு, 4 லட்சம் இழப்பீடு வழங்கவும் புதுச்சேரி அரசுக்கு உத்தரவிட்டார்.