Also Watch
Read this
By: Manigandan Raja

சக்கரத்தில் சிக்கி பலி :
கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி உரிகம் அடுத்துள்ள ஜீமநத்தம் கிராமத்தில் பழமை வாய்ந்த மாரியம்மன் கோயில் உள்ளது இந்த கோயிலில் நேற்று தேர் திருவிழா நடைபெற்றது
அதனைத் தொடர்ந்து மாலையில் தேர் இழுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது அப்போது ஏராளமான பொதுமக்கள் தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர் அப்போது அதே கிராமத்தை சேர்ந்த குமார் (30 ) என்ற
வாலிபரும் தேரை இழுத்து சென்றுள்ளார்.
கூட்ட நெரிசலில் எதிர்பாராத வகையில் வாலிபர் குமார் தேர் சக்கரத்தில் பக்கவாட்டில் விழுந்துள்ளார் அதில் அவருக்கு தலை மற்றும் மார்பு பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது உடனடியாக அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் அவரை மீட்டு உரிகம் அரசு ஆரம்ப சுகாதார மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் மருத்துவர்கள் அவரை பரிசோதித்து அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது இந்த சம்பவம் குறித்து அஞ்செட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் கோயில் திருவிழாவின்போது தேர் சக்கரத்தில் விழுந்து வாலிபர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved