Also Watch
Read this
By: Web Team

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் இருந்து கோடியக்கரை செல்லும் மாநில நெடுஞ்சாலை குண்டும் குழியுமாக கிடப்பதால் தினந்தோறும் விபத்துகள் ஏற்படுவதாக வாகன ஓட்டிகள் குற்றம் சாட்டினர். திருத்துறைப்பூண்டியில் இருந்து வாய்மேடு என்கின்ற பகுதி வரை சுமார் 15 கிலோ மீட்டர் தூரம் வரை சாலை மிகவும் பழுதடைந்து குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. பள்ளத்தில் தண்ணீர் தேங்கி நிற்பதால் பள்ளம் தெரியாமலே அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவதாகவும், பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் குற்றம் சாட்டிய மக்கள் சாலையை சீரமைத்துத் தரவேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved