news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews சத்திரக்குடியில் தனியார் பள்ளி வாகனம் கவிழ்ந்து விபத்து
tv

Also Watch

tv

Read this

சத்திரக்குடியில் தனியார் பள்ளி வாகனம் கவிழ்ந்து விபத்து

சத்திரக்குடி, ராமநாதபுரம்

13

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
RMD School van

பள்ளி வாகனம் கவிழ்ந்து விபத்து :

ராமநாதபுரம் மாவட்டம் சத்திரக்குடியை அடுத்த முத்துவயல் கிராமத்தில் செயல்பட்டு வரக்கூடிய வாசன் என்ற தனியார் பள்ளியின் வாகனம் சத்திரக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள மாணவ மாணவிகளை ஏற்றிக்கொண்டு வழக்கம் போல இன்று பள்ளிக்கு சென்ற போது.

சத்திரக்குடி ஆரம்ப சுகாதார நிலையம் அருகே ராமநாதபுரம் மதுரை தேசிய நெடுஞ்சாலையில் இருந்து முத்து வயல் கிராம நெடுஞ்சாலை நோக்கி வளைய முற்பட்டபோது கட்டுப்பாட்டை இழந்த பேருந்து தலை குப்புற கவிழ்ந்தது.

இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த 20க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் பலத்த காயமடைந்து சிகிச்சைக்காக ராமநாதபுரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதன் காரணமாக ராமநாதபுரம் மதுரை தேசிய நெடுஞ்சாலை மற்றும் ராமநாதபுரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் பெற்றோர் மற்றும் உறவினர்கள் குவிந்ததால் பதட்டமான சூழல் நிலவியது மேலும் ஓட்டுநர் சுரேஷ் என்பவனை சத்திரக்குடி போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Link
பிப்ரவரி 27 மற்றும் 28ம் தேதிகளில் கச்சத்தீவு திருவிழா

பிப்ரவரி 27 மற்றும் 28ம் தேதிகளில் கச்சத்தீவு திருவிழா


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பாஜகவிடம் அதிமுக சரணாகதி - ராகுல் காந்தி விமர்சனம்

3
51 mins agoshare
பாஜகவிடம் அதிமுக சரணாகதி - ராகுல் காந்தி விமர்சனம்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved