Also Watch
Read this
By: Manigandan Raja

கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு பேரூராட்சிக்கு உட்பட்ட பிணந்தோடு பகுதியில் மூன்று பன்றி பண்ணைகள் செயல்பட்டு வந்தது . கழிவுகள் தேக்கி சுகாதாரமற்ற நிலையில் செயல்படும் பன்றி பண்ணைகளால் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.
பண்ணைகளை அகற்ற கேட்டு , பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். பல்வேறு போராட்டங்களும் நடந்துள்ளது. இதற்கு இடையே இரண்டு நாட்களுக்கு முன் ஒரு பண்ணையை தாசில்தார் முன்னிலையில் அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர்.
இந்நிலையில் நேற்று இரவு இப்பகுதியில் உள்ள ஒரு பண்ணைக்கு கோழி கழிவுகளுடன் ஒரு வாகனம் வந்தது . இதை பிணந்தோடு அருகே பொதுமக்கள் மடக்கி பிடித்தனர். இது குறித்து போலீசாருக்கும், பேரூராட்சி அதிகாரிகளுக்கும் தகவல் கொடுத்தனர்.

அதிகாரிகள் முறையான பதில் சொல்லாததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து தவெக நிர்வாகிகள் மா.கம்யூ நிர்வாகிகள் உள்ளிட்ட அரசியல் நிர்வாகிகளும் சம்பவ இடம் வந்தனர் . இதை தொடர்ந்து போலீசார் சம்பவ இடம் வந்தனர் .
சற்று நேரத்தில் பேரூராட்சி பணியாளர்காலும் சம்பவ இடத்தில் வந்தனர் . பொதுமக்கள் கோரிக்கை ஏற்று , வாகனத்தை பறிமுதல் செய்த போலீசார் பேரூராட்சி பணியாளர்களிடம் ஒப்படைத்தனர். கழிவுகளை பேரூராட்சி பணியாளர்கள் மேலாண்மை செய்த பின் வாகனத்தை போலீசிடம் ஒப்படைக்கவும் முடிவு செய்து வாகனத்தை கொண்டுசென்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved