Also Watch
Read this
By: Manigandan Raja

தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு கடப்பேரி திருநீர்மலை மெயின் ரோட்டில் . நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி வழக்கறிஞர் ஆகாஷ் ஏற்பாட்டில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக மனித வள மேம்பாட்டு துறை அமைச்சர் சரத்குமார் அவர்கள் கலந்து கொண்டு தையல் மிஷின்கள், அரிசி மூட்டைகள் மற்றும் ஹாட் பாக்ஸை பொதுமக்களுக்கு வழங்கினார்.
அப்பொழுது பேசிய அமைச்சர் சரத்குமார் நான் தாம்பரத்தில் எம்எல்ஏவாக இருந்து வருகிறேன். அதே நேரத்தில் அமைச்சராக இருந்து வரும் நிலையில் என் தாம்பரம் தொகுதி மக்களுக்கு என்னால் எதுவும் செய்ய முடியாத சூழ்நிலையை ஏற்படுத்திவிட்டார்கள்.
ஏதாவது சொல்லி அதிகாரியை செய்ய வைத்தால், அதிகாரியை திருப்பி அனுப்புகின்றனர். ஏனென்றால் தற்போது உள்ள உள்ளாட்சி பிரதிநிதிகள் அதை தடுத்து நிறுத்துவதாகவும் , மக்கள் எங்களை தான் கவுன்சிலராக தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள் எனக்கூறி பணிகளை தடுத்து நிறுத்துவதாகவும், வேதனை தெரிவித்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved