news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news பிஃபா உலகக் கோப்பை யாருக்கு? இறுதிப் போட்டியில் வெல்லப் போவது யார்?
tv

Also Watch

பிஃபா உலகக் கோப்பை யாருக்கு? இறுதிப் போட்டியில் வெல்லப் போவது யார்?

பிஃபா உலகக் கோப்பை

5

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Messi

உலகமே உற்று நோக்கிக் கொண்டிருக்கும் பிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இறுதி போட்டி, நியூ ஜெர்சியில் உள்ள மெட்லைஃப் மைதானத்தில் ஜூலை 20ஆம் தேதி இந்திய நேரப்படி அதிகாலை 12:30 மணிக்கு நடைபெறுகிறது.

2026 உலகக் கோப்பையில் ஸ்பெயின் மற்றும் அர்ஜென்டினா அணிகள் சமபலம் வாய்ந்தவை. கால்பந்து வரலாற்றில் இதுவரை 14 போட்டிகளில் மோதியுள்ள இரு அணிகளும், தலா 6 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன. 2 போட்டிகளை டிராவில் முடித்துள்ளன.

உலகக் கோப்பை வரலாற்றில் இதற்கு முன்பு ஒரே ஒரு முறை மட்டுமே மோதியுள்ள ஸ்பெயின் - அர்ஜெண்டினா அணிகள், இப்போது மோதவிருப்பது இரண்டாவது முறையாகும். 1966 உலகக் கோப்பை தொடரில் இரு அணிகளும் மோதிக் கொண்ட போது, 2-1 என்ற கோல் கணக்கில் ஸ்பெயினை வீழ்த்தி அர்ஜென்டினா வெற்றி பெற்றது. கடைசியாக கடந்த 2018ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற போட்டியில் மோதிய போது, 6-1 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினாவை வீழ்த்தி ஸ்பெயின் அணி வெற்றி பெற்றது.

(Courtesy : Chase your sport)

ஸ்பெயின் அணியின் முக்கியமான பலம் மிட்ஃபீல்ட் ஆதிக்கம் தான். ரோட்ரி ((Rodri)), பெட்ரி ((Pedri)) போன்ற உலகத்தரம் வாய்ந்த மிட்ஃபீல்டர்கள், எதிரணிக்கு பந்து கிடைக்க விடாமல் ஆதிக்கம் செலுத்துவதும், லாமின் யமால் ((Lamine Yamal)), நிகோ வில்லியம்ஸ் ((Nico Williams)) போன்ற இளம் நட்சத்திரங்களின் அசுர வேகமும், பந்தைக் கடத்தும் திறனும் மிகப்பெரிய பலமாக பார்க்கப்படுகிறது. எதிரணி வீரர்களை நெருக்கி, பந்தை மிக விரைவாக மீட்டெடுப்பதில் சிறப்பாக செயல்படுவது மற்றொரு முக்கிய பலமாக பார்க்கப்படுகிறது.

(Courtesy : Coache's voice)

ஸ்பெயின் அணியின் பலவீனத்தை பொறுத்தவரை, 'Low Block' வியூகம் தான் முக்கியமானது. ஸ்பெயின் அணியின் தடுப்புச் சுவருக்குப் பின்னால் அனைத்து வீரர்களையும் நிறுத்தி, பந்தை மட்டுமே நம்பி டிஃபன்ஸ் செய்யும் அணிகளுக்கு எதிராக கோல் அடிக்க தடுமாறுகிறது. அணியில் பலர் இளம் வீரர்கள் உள்ளதால், அழுத்தம் நிறைந்த இறுதிப் போட்டியின் கடைசி நிமிடங்களில் தடுமாற்றம் காரணமாக சில தற்காப்புத் தவறுகள் நிகழ வாய்ப்புள்ளது.

அர்ஜெண்டினாவை பொறுத்தவரை லியோனல் மெஸ்ஸியின் அனுபவமும், ஆட்ட நுணுக்கங்களும் தான் அணியின் மிக முக்கியமான பலமாக கருதப்படுகிறது. மெஸ்ஸி எந்த நேரத்திலும் ஆட்டத்தின் போக்கை மாற்றக்கூடியவர். ஒட்டுமொத்த அணியுமே கடைசி 15-20 நிமிடங்களில் சிறப்பாகப் போராடி ஆட்டத்தை மாற்றும் திறன் படைத்தது. நடப்பு சாம்பியனாக களமிறங்குவதால் நம்பிக்கையுடன் உள்ள வீரர்கள், நெருக்கடியான சூழ்நிலைகளையும் எளிதாக கையாண்டு மிகச்சிறப்பாக மீண்டு வருகின்றனர்.

(Courtesy : Olymbics.com )

அரையிறுதிக்கு வந்த பிற அணிகளுடன் ஒப்பிடும்போது, அர்ஜெண்டினா வீரர்கள் குறைந்த தூரம் ஓடியதும், பாதியிலேயே சென்று பந்தை தடுத்து நிறுத்துவதில் சற்று பின்தங்கியே இருப்பதும், அர்ஜென்டினா அணியின் பலவீனங்களாக உள்ளன.

அதுமட்டுமின்றி மெஸ்ஸியின் நகர்வுகள் தடுக்கப்படும்போது அணியின் ஆஃப்-தி-பால் வேகம் குறைவதும், டி பால் மற்றும் மெக் அலிஸ்டர் ஆகியோர் நடுக்களத்தில் பந்தைப் பறிகொடுப்பதும் மற்ற பலவீனங்களாக பார்க்கப்படுகிறது.

உலகம் முழுவதுமுள்ள கால்பந்து ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கும், இறுதிப் போட்டியில் வெற்றி பெறப்போவது யார்?... உலகக் கோப்பையை ஏந்த போவது எந்த அணி? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Related Link
ரோஹித் சர்மாவின் பேட்டிங் குறித்து கவலை இல்லை

ரோஹித் சர்மாவின் பேட்டிங் குறித்து கவலை இல்லை

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கல்குவாரிகளை மூட வலியுறுத்தி 38 கிராம மக்கள் தீர்மானம்

6
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved