Also Watch
Read this
By: Manigandan Raja

பந்துவீச்சு பயிற்சியாளர் மோர்னே மோர்க்கல் அறிவிப்பு
ரோஹித் சர்மாவின் பேட்டிங் குறித்து எந்தவொரு கவலையும் தங்களுக்கு இல்லை என அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் மோர்னே மோர்க்கல் தெரிவித்துள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான முதல் 2 போட்டிகளிலும் ரோஹித் சர்மா பெரியளவில் ரன் குவிக்கவில்லை.
இந்த சூழலில், இதுகுறித்து பேசிய மோர்னே மோர்க்கல், புதிய பந்தில் சிறப்பாக விளையாடுவது கடினம் எனவும், இதனை இந்த தொடர் முழுவதும் பார்ப்பதாகவும் தெரிவித்தார். மேலும், ரோஹித் சர்மாவின் அனுபவம் மற்றும் பொறுமை அணியின் பேட்டிங் வரிசைக்கு வலுசேர்ப்பதாக அமையும் எனவும் தெரிவித்தார்.
இந்தியா - இங்கிலாந்து இடையேயான கடைசி ஒருநாள் போட்டி

இந்தியா - இங்கிலாந்து இடையேயான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று நடைபெறவுள்ள நிலையில், தொடரை வெல்லப்போவது யார் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்தியா - இங்கிலாந்து இடையேயான ஒருநாள் போட்டியில் இரு அணிகளும் தலா ஒரு போட்டிகளில் வெற்றிபெற்று சமநிலையில் உள்ளன.
இந்த சூழலில், இங்கிலாந்தின் லார்ட்ஸ் மைதானத்தில் மதியம் 3.30 மணியளவில் போட்டி நடைபெறுகிறது. டி20 தொடரை இந்திய அணி இழந்ததால், ஒருநாள் தொடரையாவது கைப்பற்றுமா என இந்திய ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.