news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews இந்திய தேசியக் கொடியை மீராபாய் சானு ஏந்திச் செல்வார்
tv

Also Watch

இந்திய தேசியக் கொடியை மீராபாய் சானு ஏந்திச் செல்வார்

காமன்வெல்த் போட்டி

5

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
மீராபாய் சானு

வரும் 23-ம் தேதி காமன்வெல்த் போட்டிகள் தொடக்க விழா 

ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவில் நடைபெறும் 2026 காமன்வெல்த் போட்டிகள் தொடக்க விழாவில், இந்தியா சார்பில் மீராபாய் சானு தேசியக் கொடியை ஏந்திச் செல்வார் என இந்திய ஒலிம்பிக் சங்கம் தெரிவித்துள்ளது. வரும் 23ம் தேதி அதிகாரப்பூர்வமாக OVO Hydro மைதானத்தில் தொடங்கும் இந்த போட்டியில் இந்தியா சார்பில் 126 வீரர், வீராங்கனைகள் பல்வேறு பிரிவுகளில் கலந்துகொள்கிறார்கள்.

இந்த நிலையில், ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மீராபாய் சானு இந்தியாவின் தேசியக் கொடியையும், லவ்லினா போர்கோஹெய்ன் Baton-ஐயும் ஏந்திச் செல்வார்கள் என இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் பி.டி உஷா உறுதிப்படுத்தியுள்ளார்.

வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஜாம்பவான் கேரி சோபர்ஸ் மறைவு 

வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஜாம்பவான் கேரி சோபர்ஸ் மறைவுக்கு கவாஸ்கர், கபில்தேவ், சச்சின், கோலி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். கேரி சோபர்சின் மறைவு கிரிக்கெட்டின் சோகமான நாள் என கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இந்த பூமியில் தோன்றிய மிக சிறந்த கிரிக்கெட் வீரர்களில் சோபர்சும் ஒருவர் என கபில்தேவ் புகழாரம் சூட்டியுள்ளார். கேரி சோபர்சின் மறைவை ஏற்றுக்கொள்ளவே மிகவும் கடினமாக உள்ளதாக சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார். மிக சிறந்த வீரர்களில் ஒருவரை கிரிக்கெட் இழந்து விட்டதாக விராட் கோலி தெரிவித்துள்ளார்.

வாஷிங்டன் சுந்தருக்கு பதிலாக ஹர்ஷ் துபே சேர்ப்பு 

இங்கிலாந்துக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் வாஷிங்டன் சுந்தருக்கு பதிலாக மாற்று வீரராக ஹர்ஷ் துபே சேர்க்கப்பட்டுள்ளார். இந்தியா - இங்கிலாந்து இடையேயான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது.

தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் இந்த போட்டிக்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், காயம் காரணமாக ஒருநாள் போட்டியிலிருந்து ஆல்ரவுண்டர் வாஷிங்டர் சுந்தர் விலகியுள்ளார். எனவே, அவருக்கு பதிலாக மாற்று வீரராக ஹர்ஷ் துபே ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

Related Link
ஃபிஃபா உலகக் கோப்பையை யார் வெல்வார்கள்..?

ஃபிஃபா உலகக் கோப்பையை யார் வெல்வார்கள்..?

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கல்குவாரிகளை மூட வலியுறுத்தி 38 கிராம மக்கள் தீர்மானம்

4
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved