Also Watch
Read this
By: Manigandan Raja

தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள தலைவன் வடலி கிராமத்தில் சுமார் 3000 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதிக்கு பேருந்து வசதி இல்லாததாலும் முறையாக குடிநீர் வழங்காததாலும் அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் கோரிக்கை விடுத்து வந்தனர்.
அதற்கு நடவடிக்கை எடுக்கப்படாததால் ஆத்திரமடைந்த பகுதி பெண்கள் திருச்செந்தூர் தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் தலைவன்வடலி விலக்கு அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.
போராட்டத்தில் ஈடுபட முயன்ற பெண்களை போலீசார் தடுத்ததால் வாக்குவாதம் ஏற்பட்டது.

அதனை தொடர்ந்து ஒரு வாரத்திற்குள் சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக காவல்துறையினர் வாய்மொழி உத்திரவாதம் கொடுத்ததை போராட்டத்தை பெண்கள் கைவிட்டனர். ஒரு வாரத்திற்குள் நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் மீண்டும் இதே சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவதாக அப்பகுதி பெண்கள் தெரிவித்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved