திருவள்ளூர் மாவட்டம், சித்தஞ்சேரியில் நடைபெற்ற இரங்கல் நிகழ்ச்சியில், சிறுமி ஒருவரின் பிறந்தநாள் கேக் வெட்ட முயன்ற தொண்டரிடம், சிறிது நேரம் பொறுத்திருங்கள் என விசிக தலைவர் திருமாவளவன் கூறியதால், கோபமடைந்த தொண்டர், கேக்கை மேடையின் மீது வீசியதால் சலசலப்பு ஏற்பட்டது.விசிக நிர்வாகியின் தாய் மறைந்ததையடுத்து, அவரது திருவுருவப்படம் திறப்பு நிகழ்ச்சியில் திருமாவளவன் பங்கேற்றார். அப்போது, கேக்குடன் மேடை ஏறிய தொண்டர் ஒருவர், தனது மகளின் பிறந்த நாளையொட்டி, நீங்கள் கேக் வெட்ட வேண்டும் என கூறினார். அப்போது, இது துக்க நிகழ்ச்சி என்றும் இதனை முடித்த பின்னர், பிறந்தநாள் கேக் வெட்டலாம் என திருமாவளவன் கூறியதால் தொண்டர் கோபமடைந்தார்.