Also Watch
Read this
By: Manigandan Raja

'ROAR ’26' தலைப்பில் விழா :
ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன்பாகவே சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது ரசிகர்களுக்காக ஒரு பிரம்மாண்டமான கொண்டாட்ட நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து வருகிறது. சேப்பாக்கம் மைதானத்தில் வரும் 22 ஆம் தேதி 'ROAR ’26' என்ற விளையாட்டு மற்றும் கலை நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
இதில் சிஎஸ்கே அணியின் முன்னாள் ஜாம்பவான்களான சுரேஷ் ரெய்னா, மேத்யூ ஹெய்டன், முரளி விஜய் மற்றும் எஸ். பத்ரிநாத் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களை உறசாகப்படுத்தவுள்ள நிலையில் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது.
இந்நிகழ்ச்சிக்கான டிக்கெட் விற்பனை இன்று தொடங்கும் நிலையில், District ஆப் மற்றும் District.in ஆகியவற்றின் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம் என ரசிகர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved