Also Watch
Read this
Posted on: May 19, 2025 03:37 PM
By: Srini Vasan

ராமநாதபுரம் மாவட்டம் திணைக்குளம் பகுதியில் தொழுகைக்கு பின் நண்பர்களுடன் சென்ற இளைஞரின் உடல் கடற்கரையில் காயங்களுடன் காணப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
செய்யது அப்துல்லா என்பவரை, கடந்த வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகை முடிந்த பின் அவரது நண்பர்கள் 4 பேர் அழைத்துச் சென்றனர்.
ஆனால் அவர் தொழில் போட்டி காரணமாக கொலை செய்யப்பட்டதாக சந்தேகம் தெரிவித்துள்ள உறவினர்கள், உடலை வாங்க மறுத்து கொலையாளிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு மறியலில் ஈடுபட்டனர்.
காவல்துறை மற்றும் வருவாய் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து உடலை பெற்றுக் கொண்டு கலைந்து சென்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved