news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews 12 ஜோதிர் லிங்கங்களுக்கு அபிஷேகம் செய்து தீபாராதனை
tv

Also Watch

12 ஜோதிர் லிங்கங்களுக்கு அபிஷேகம் செய்து தீபாராதனை

காரைக்கால்

1

By: Fyrose Banu

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
karai 3

காரைக்காலில் 12 ஜோதிர் லிங்க நிறைவு நாளான இன்று ஏராளமான பக்தர்கள் சிவ கோஷங்கள் எழுப்பியவாறு 12 ஜோதிர் லிங்கங்களுக்கு அபிஷேகம் செய்து தீபாராதனை செய்து சிவ வழிபாடு செய்தனர்.காரைக்காலில் 12 ஜோதிர் லிங்கங்கள் ஒரே இடத்தில் அமைக்கப்பட்டு பொதுமக்கள் தரிசனம் செய்வதோடு தங்கள் கைகளால் சிவலிங்கங்களுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டனர்.

இந்து முன்னணி அமைப்பு சார்பில் குஜராத் மாநிலத்தில் உள்ள ஸ்ரீ நாகேஸ்வரர்,ஸ்ரீ சோம்நாத், ஆந்திர மாநிலத்தை சேர்ந்த ஸ்ரீ மல்லிகார்ஜூனா, மத்திய பிரதேசத்தை சேர்ந்த ஸ்ரீ மகாகாளேஸ்வரர், ஸ்ரீ ஓங்காரேஸ்வரர், உத்தரகாண்ட் சேர்ந்த கேதார்நாத், மகாராஷ்டிரா சேர்ந்த ஸ்ரீ த்ரியம்பகேஸ்வரர், ஸ்ரீபீமா சங்கர், ஸ்ரீ கிரிஷ்நேஸ்வரர், உத்தர பிரதேசத்தை சேர்ந்த காசி விசுவநாதர், ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ஸ்ரீ வைத்தியநாத், தமிழ்நாடு சேர்ந்த ஸ்ரீ ராமநாதசுவாமி ஆகிய 12 ஜோதிர்லிங்கங்கள் காரைக்கால் அம்மையார் ஆலய திருகுளக்கரையில் அமைக்கப்பட்டு பக்தர்கள் அபிஷேகம் செய்து வழிபட இந்து முன்னணி மாவட்ட செயலாளர் ராஜ்குமார்,இந்து முன்னணி மாநில ஒருங்கிணைப்பாளர் கணேஷ் மற்றும் நிர்வாகிகள் சிறப்பான ஏற்பாடு செய்திருந்தனர். கடந்த 17ம் தேதி முதல் இன்று வரை மூன்று நாட்கள் 12 ஜோதிர்லிங்கங்கள் வழிபாடு நடைபெற்றது.

மேலும் நிகழ்ச்சிக்கு வருகை தந்த சிவ பக்தர்கள் சிவ புராணத்தை பாராயணம் செய்து வழிபட்டனர். நிறைவு நாளான இன்று சிவாச்சாரியார்கள் 12 ஜோதிர்லிங்கங்களுக்கும் மகாதீபாரதனை காண்பித்தனர். மேலும் இன்று மாலை பக்தர்கள் 12ஜோதிர்லிங்கங்களுக்கு அபிஷேகம் செய்து மகாதீபாராதனை காண்பித்து சிவ கோஷங்கள் எழுப்பி வழிபட்டனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

திருவாரூரில் திடீர் கனமழை

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved