news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews
tv

Also Watch

கடல் சீற்றம் காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்ல வில்லை

தூத்துக்குடி

1

By: Fyrose Banu

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
tut

தூத்துக்குடி விசைப்படகு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து சுமார் 240க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் உயர் அலைகள் மற்றும் கடல் சீற்றம் காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்ல வில்லை. மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை கடல் மீனவர் நலன் தூத்துக்குடி மாவட்டம் - இந்திய வானிலை ஆய்வு துறை மண்டல வானிலை ஆய்வு மையம், சென்னையிலிருந்து பெறப்பட்ட வானிலை எச்சரிக்கை செய்தி மீனவர்களுக்கு அறிவிப்பு

மீனவர்கள் மற்றும் கடலோர பகுதி மக்களுக்கான முக்கிய எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளன. இந்திய பெருங்கடலில் கேரளா, தெற்கு தமிழ்நாடு மற்றும் லட்சத்தீவு கடலோரப் பகுதிகளில் உயர் அலைகள் மற்றும் கடல் சீற்றம் (கள்ளக்கடல் - Swell Surge) ஏற்படக்கூடும் என இந்திய தேசிய பெருங்கடல் தகவல் சேவை மையம் (INCOIS) எச்சரித்துள்ளது. பாதுகாப்பு வழிமுறைகள் பின்பற்ற கடற்கரை மற்றும் தாழ்வான கடலோரப் பகுதிகளில் கடல் நீர் திடீரென அலை அலையாக சீறிப் பாய வாய்ப்புள்ளதால், கரையோர மக்கள் மற்றும் மீனவர்கள் மிகுந்த விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

நாட்டுப்படகுகள் கரையோரம் மற்றும் குறைந்த ஆழமுள்ள பகுதிக்கு அருகில் செல்ல வேண்டாம். மற்றும் கரையில் அல்லது கடலில் நிறுத்தப்பட்டுள்ள படகுகள் ஒன்றோடு ஒன்று மோதி சேதமடைவதைத் தவிர்க்க, படகுகளுக்கு இடையே போதிய இடைவெளி விட்டு பாதுகாப்பாக நங்கூரமிட்டு நிறுத்த வேண்டும். கரையோரப் பகுதிகளில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் கடலில் இறங்குவதையோ, நீந்துவதையோ தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இந்த அறிவிப்பை அனைத்து மீனவர்களுக்கும் தெரியப்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது உயர் அலைகள் மற்றும் கடல் சீற்றம் காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்ல வில்லை.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

100 நாள் வேலை கேட்டு அதிகாரி காலில் விழுந்த பெண்

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved