news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews
tv

Also Watch

மதுரையில் பிரபல தனியார் பள்ளி ஆசிரியர் பாலியல் தொல்லை

மதுரை

2

By: Fyrose Banu

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
mdu 2

மதுரை மாவட்டம் விரகனூர் பகுதியில் உள்ள பிரபல தனியார் பள்ளியில் 2025-26ல் பயின்ற +2 மாணவிகளுக்கு நேரடியாகவும், போன் மூலமாகவும் பாலியல் தொந்தரவு அளித்ததாக இயற்பியல் ஆசிரியர் ராஜ்குமார் என்பவர் மீது மாணவிகள் சிலர் மதுரை மாவட்ட ஆட்சியர் நிசாந்த் கிருஷ்ணாவிடம் ரகசிய புகார் மனு அளித்துள்ளனர். இது தொடர்பாக குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், ஊமச்சிகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இயற்பியல் ஆசிரியர் ராஜ்குமார் மற்றும் ஹாஸ்டல் வார்டன் உள்ளிட்ட 4 பேர் மீது போக்சோ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

காவல்துறையினர் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள் பள்ளியில் நடத்திய விசாரணையில், குற்றஞ்சாட்டப்பட்ட ஆசிரியர் ராஜ்குமார் மீது பள்ளி முதல்வரிடம் ஏற்கனவே மாணவிகள் அளித்திருந்த புகாரின் அடிப்படையில் அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு விட்டதாக நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். மேலும், புகார் தெரிவித்த மாணவிகளிடமும் காவல்துறை மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த நிலையில் மதுரை தனியார் பள்ளியில் இயற்பியல் ஆசிரியர் இயற்பியல் ஆசிரியர் ராஜ்குமார் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றன.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

100 நாள் வேலை கேட்டு அதிகாரி காலில் விழுந்த பெண்

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved