Also Watch
Read this
திமுக அரசின் சாதனை திட்டங்களை கூறுவது போல, எடப்பாடி பழனிசாமி என்ன செய்தார் என சொல்லமுடியுமா? என்று, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சவால் விடுத்தார்.

சங்கரன் கோவிலில் பிரச்சாரம் மேற்கொண்ட முதலமைச்சர், நாட்டில் சிலிண்டருக்காக காத்திருக்கும் பெண்கள் மோடி ஜி where's எல்.பி.ஜி என கேட்க ஆரம்பித்து விட்டதாகவும், தேர்தல் காலத்தில் கியாஸ் விலை உயர்த்தியதை , மத்திய பாஜகவிடம் கேட்க எடப்பாடி பழனிசாமிக்கு தெம்பு உள்ளதா? எனவும் கேள்வி எழுப்பினார்.

சங்கரன்கோவிலில் முதல்வர் மு.க.ஸ்டாலின்
சங்கரன்கோவிலில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில்,
தென்காசி தி.மு.க., வேட்பாளர் கலைக்கதிரவன்
கடையநல்லூர் மதிமுக ராஜேந்திரன்

சங்கரன்கோவில் (தனி) காங்கிரஸ் சங்கை கணேசன்
வாசுதேவநல்லூர் தி.மு.க. ராஜா
ஆலங்குளம் தி.மு.க. மனோஜ் பாண்டியன் ஆகியோருக்கு ஆதரவு கோரி, முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின் பேசியதாவது:
நாங்கள் கொள்கை கூட்டணியுடன் ஓட்டு கேட்கிறோம். ஆனால் அ.தி.மு.க., மற்றும் பா.ஜ.க. தமிழகத்திற்கு செய்த நன்மைகளை சொல்ல முடியாத நிலையில் உள்ளனர். எந்த அடிப்படையில் கூட்டணி அமைந்துள்ளது என்பதையும் வெளிப்படையாக கூற முடியவில்லை.

தென்காசிக்கு திட்டங்கள்
தென்காசி மாவட்டத்தில் ரூ.69 கோடி மதிப்பில் கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு உள்ளது. குற்றாலத்தில் ரூ.11 கோடி மதிப்பில் வளர்ச்சிப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இல்லத்தரசிகளுக்கு ரூ.8,000 கூப்பன் வழங்கும் புதிய திட்டம் கொண்டு வரப்படும். அ.தி.மு.க., ஆட்சியில் அறிவிக்கப்பட்ட சென்னை -கன்னியாகுமரி கடற்கரை சாலை, தென் தமிழக ஏரோ பார்க், ஆடை பூங்கா உள்ளிட்ட திட்டங்கள் எதுவும் நடைமுறைப்படுத்தப்படவில்லை. பெண்களுக்கு ஸ்கூட்டர், அனைவருக்கும் மொபைல் போன் வழங்குவதாக கூறினர். அதையும் செயல்படுத்தவில்லை.

தமிழகத்திற்கு தேவையில்லை
பா.ஜ.க.வின் 'டபுள் இன்ஜின்' திட்டம் தமிழகத்திற்கு தேவையில்லை. நாடு முழுவதும் ’மோடி ஜி... 'வேர் இஸ் எல்பிஜி' என்று பொது மக்கள் கேட்கின்றனர். சிபிஎஸ்இயில் 6ஆம் வகுப்பு முதல் மும்மொழி கட்டாயம் என அறிவித்ததை இன்றும் எதிர்க்கிறேன்.

இந்தி திணிப்பை தமிழகத்தில் ஏற்க முடியாது. மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கல்வி நிதியை விடுவிக்காமல் குற்றம் சாட்டுகிறார். இந்தி திணிப்புக்கும் கல்வித் தரத்திற்கும் தொடர்பில்லை.
தமிழகத்தின் கல்வி தரம் உயர்ந்த நிலையில் உள்ளது. தர்மேந்திர பிரதான், அமித்ஷா, மோடி ஆகியோர் தமிழகத்தில் மும்மொழி கொள்கையை அறிவித்து ஓட்டு கேட்டு பிரசாரம் செய்யத் துணிவு உள்ளதா? என்று சவால் விடுக்கிறேன். எதிர்க்கட்சித் தலைவர் பழனிச்சாமி இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க முடியுமா?

தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சிகள் தமிழகத்தின் முன்னேற்றத்திற்காக போராடுகின்றன. தமிழகத்தை பாதுகாக்க தி.மு.க., கூட்டணியை ஆதரிக்க வேண்டும்.
இவ்வாறு பேசி, முதல்வர் ஸ்டாலின் வாக்கு சேகரித்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved