news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews பாஜக உறுப்பினரானார் நடிகை கஸ்தூரி
tv

Also Watch

tv

Read this

பாஜக உறுப்பினரானார் நடிகை கஸ்தூரி

சென்னை

22

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
9

திரைப்பட நடிகை கஸ்தூரி, பாஜகவில் இணைந்துள்ளார்.

தமிழ் சினிமாவில் 90களில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் நடிகை கஸ்தூரி.

சமீபகாலமாக, அதிமுக மற்றும் பாஜகவிற்கு ஆதரவாக செயல்பட்டு வந்தார். திமுக அரசை கடுமையாக விமர்சித்தும் வந்தார். இந்த நிலையில், நடிகை கஸ்தூரி பாஜகவில் இணைந்துள்ளார்.

பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் முன்னிலையில் பாஜகவில் கஸ்தூரி இணைந்தார்.

இதுதொடர்பாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள பதிவு:

நடிகை கஸ்தூரி மற்றும் சமூக செயற்பாட்டாளரும்,Namis South Queen India நிறுவன தலைவருமான திருநங்கை நமிதா மாரிமுத்துவும், சென்னை பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில், தமிழ்நாடு பாஜக கலை மற்றும் கலாச்சார பிரிவு தலைவர் பெப்சி சிவா முன்னிலையில்,பாஜகவில் இணைந்தனர்.

சமூக செயல்பாட்டாளரான கஸ்தூரி மற்றும் நமிதா மாரிமுத்துவும், இன்று முதல் அதிகாரப்பூர்வமாக அரசியல் பயணத்தில் இணைந்திருப்பது வரவேற்கத்தக்கது. அவர்களுடைய அரசியல் பயணம் தமிழக பாஜகவில் தொடங்கி இருப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.

இவ்வாறு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அசாம் முதலமைச்சராக ஹிமந்த பிஸ்வா சர்மா தேர்வு

2
4 hrs 8 mins agoshare
ஹிமந்த பிஸ்வா சர்மா








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved