news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews பாஜகவிற்கு அதிமுக பலியாகிவிட்டது
tv

Also Watch

பாஜகவிற்கு அதிமுக பலியாகிவிட்டது

புதுக்கோட்டை

56

By: Fyrose Banu

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
tvk 6

புதுக்கோட்டை திலகர் திடலில் தமிழக வெற்றிக்கழக கொள்கை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. மத்திய மாவட்ட தலைவர் பர்வேஸ் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பரப்புரைச் செயலாளர் நாஞ்சில் சம்பத், துணைப் பொதுச்செயலாளர் ராஜ்மோகன், கொள்கை பரப்பு இணைச் செயலாளர் லயோலா மணி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர்.

இதற்குப் பெயர் தான் திமுக வா ?
கூட்டத்தில் பேசிய நாஞ்சில் சம்பத், ஓபிஎஸ், அன்வர் ராஜா, வைத்தியலிங்கம், மனோஜ் பாண்டியன், சேகர் பாபு, செந்தில் பாலாஜி, அனிதா ராதாகிருஷ்ணன், ராஜ கண்ணப்பன், ரகுபதி உள்ளிட்ட அதிமுகவினர் திமுகவின் தங்களை இணைத்துக் கொண்டனர். இதற்குப் பெயர் தான் திமுக வா ? திமுகவை அண்ணா திமுக 2 என மாற்றிக் கொள்ளலாம் கடுமையாக விமர்சனம் செய்தார்.

எந்த பிரச்சனைக்கும் குரல் கொடுக்கவில்லை
நாடாளுமன்றத்தில் திமுகவின் சார்பில் 40 உறுப்பினர்கள் இருந்தும் இதுவரை எந்த பிரச்சனைக்கும் குரல் கொடுக்கவில்லை. எஸ்.ஐ.ஆர் திருத்த பணிகளுக்கு எதிராக மம்தா பானர்ஜி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கிறார். அவரே நீதிமன்றத்தில் வாதாடுகிறார். அந்த மம்தா பானர்ஜிக்கு உள்ள துணிச்சலில் ஒரு பங்கு கூட தமிழக முதலமைச்சருக்கு இல்லை.

திமுகவிற்கும் தவெகவிற்கும் இடையே தான் போட்டி
வரலாற்று சிறப்புமிக்க தமிழ்நாட்டில் டிஜிபி கிடையாது. பொறுப்பு டிஜிபி வைத்து திமுக நிர்வாகம் நடத்துகிறது. இதற்குக் காரணம் சொல்ல முடியுமா என கேள்வி எழுப்பினர். திமுகவிற்கும் தவெகவிற்கும் இடையே தான் போட்டி என தலைவர் விஜய் சொல்வதில் திமுகவிற்கு ஆத்திரம், இன்னும் எடப்பாடி பழனிச்சாமி மீதுதான் திமுக விமர்சனம் வைக்கிறது.

பாஜகவிற்கு அதிமுக பலியாகிவிட்டது
எடப்பாடி பழனிச்சாமி காணாமல் போய் பல வருடங்கள் ஆகிவிட்டது. அவர் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தலைவர் மாதிரி இருக்கிறார். இன்று நடைபெற்ற மோடியின் கூட்டத்தில் அச்சடித்த ஸ்டிக்கர் போல் அமர்ந்துள்ளார். பிரதமர் மோடி மேடையிலேயே தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமையும் என்று கூறுகிறார். அதற்கு மறுப்பு தெரிவித்து அண்ணா திமுக ஆட்சி தான் அமையும் என்று எடப்பாடி பழனிச்சாமியால் சொல்ல முடியவில்லை. பாஜகவின் நேரடி கட்டுப்பாட்டில் அதிமுகவை எடப்பாடி பழனிச்சாமி கொண்டு வந்து விட்டார். பாஜகவிற்கு அதிமுக பலியாகிவிட்டது திமுக பலியாகி கொண்டிருக்கிறது.ஆனால் தமிழ்நாட்டில் பாஜக திமுக என்ற கட்சிகளை எதிர்க்கின்ற வலிமை தவெகவிற்கு மட்டுமே உள்ளது என தெரிவித்தார்.

Related Link
96.40 லட்சம் பயணிகள் பயணம்

96.40 லட்சம் பயணிகள் பயணம்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நேபாளத்தில் திடீர் வெள்ளத்தால் கடும் பாதிப்பு

4
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved