news-tamil-logo

3/18/2026, 10:39:53 PM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews ஜெயலலிதா பிளக்ஸ் பேனரை அகற்ற அதிமுகவினர் எதிர்ப்பு
tv

Also Watch

tv

Read this

ஜெயலலிதா பிளக்ஸ் பேனரை அகற்ற அதிமுகவினர் எதிர்ப்பு

கரூர்

Posted on: Feb 01, 2026 10:35 AM

14

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Karur ADMK

கரூரில் மாவட்ட அதிமுக சார்பில் முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி இறகு பந்து மற்றும் கபாடி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெறுகின்றன.

இந்த விளையாட்டுப் போட்டிகள் குறித்து பல்வேறு இடங்களில் பிளக்ஸ் பேனர்கள் மாநகராட்சி முழுவதும் வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் போலீசார் மாநகராட்சி அனுமதியில்லாமல் சர்ச் கார்னர் பகுதியில் வைக்கப்பட்டுள்ள அதிமுக பேனர்களை அகற்ற வந்தனர்.

இதுகுறித்து அறிந்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தலைமையிலான ஏராளமான அதிமுக அந்த இடத்தில் திரண்டனர். மாநகராட்சி முழுதும் திமுகவினர் பல்வேறு இடங்களில் பேனர்கள் வைத்துள்ளனர்.

அந்த பேனர்களை அகற்றினால் அதிமுக வைத்துள்ள பேனர்களையும் அகற்றுகிறோம் என எம்.ஆர். விஜயபாஸ்கர் கூறினார். இதற்கு மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் எந்த பதிலும் அளிக்காத காரணத்தால் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட அதிமுகவினர் சாலை ஓரத்திலேயே காத்துள்ளனர்.

இதையடுத்து திமுகவினர் பேனர்களை அகற்ற ஒத்துக் கொண்டதால், அதிமுகவினரும் தங்களது பேனர்களை அகற்றிய பின்னர் கலைந்து சென்றனர்.

Related Link
வெள்ளம் போல பெருக்கெடுத்து ஓடும் காவிரி கூட்டு குடிநீர்

வெள்ளம் போல பெருக்கெடுத்து ஓடும் காவிரி கூட்டு குடிநீர்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து

0
5 hrs 52 mins agoshare
Newyork fire








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved