Also Watch
Read this
By: Web Team

சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு மண்படத்தில் நாளை நடைபெற உள்ள அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டத்திற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றது. அதிமுக அவை தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்திற்கான ஏற்பாடுகள் முன்னாள் அமைச்சரும் ,மாவட்ட செயளாலருமான பெஞ்சமின் தலைமையில் நடைபெற்று வருகிறது. வரவேற்பு பகுதியில் மறைந்த ஜெயலலிதாவுக்கும், பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் பிரம்மாண்ட கட் அவுட்டுகள் வைக்கப்பட்டுள்ளது. செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், தொண்டர்கள் என சுமார் 10 ஆயிரம் பேர் பங்கேற்பார்கள் என்பதால் அவர்களுக்கு உணவு வழங்குவதற்கான ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved