Also Watch
Read this
By: Manigandan Raja

தவெக நிர்வாகிகள் ஆய்வு :
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க கட்டிடத்தில் அமைந்துள்ள அம்மா மருந்தகத்தில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது அங்கிருந்த மூட்டை ஒன்றை பிரித்து வெளியே கொட்டினர். அதில் காலாவதி மருந்துகள் இருந்ததால் ஏன் காலாவதியான மருந்துகளை மருந்தகத்தில் வைத்துள்ளீர்கள் என மருந்தக ஊழியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
காலாவதி மருந்துகளை எப்போதும் தனியாக மூட்டை கட்டி வைத்து பின்னர் அப்புறப்படுத்துவது தான் வழக்கம் என கூறிய போதும், அதனை ஏற்க மறுத்து ஊழியரிடம் விடாது கேள்விகளை எழுப்பி அலப்பறையில் ஈடுபட்டனர்.

ஒரு கட்டத்தில் அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் யாரும் இல்லாமல் நீங்கள் எப்படி ஆய்வு செய்யலாம் என கேள்வி எழுப்பிய போது, எழுத படிக்க தெரியாத முதியவர்கள் யாரேனும் வந்து காலாவதி மருந்துகளை வாங்கினால் என்ன ஆகும் என கேட்டு அசடு வழிந்தபடியே மருந்தகத்தில் இருந்து வெளியேறினர்.
மக்கள் பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டிய ஆய்வு பணிகளில் தவெகவினர் அத்துமீறி ஈடுபடுவது அரசு ஊழியர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved