news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home sportsnews இந்திய "ஏ" அணி 8 ரன்களில் திரில் வெற்றி பெற்றது
tv

Also Watch

tv

Read this

இந்திய "ஏ" அணி 8 ரன்களில் திரில் வெற்றி பெற்றது

தம்புலா - இலங்கை

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
இந்திய _ஏ_ அணி

இலங்கை "ஏ" அணியை வீழ்த்தி இந்தியா "ஏ" அபாரம் :

இலங்கையில் நடைபெற்ற முத்தரப்பு ஒருநாள் தொடரில் இந்திய "ஏ" அணி 8 ரன்களில் திரில் வெற்றி பெற்றது. இந்தியா, இலங்கை, ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளின் "ஏ" அணிகளுக்கு இடையே போட்டி நடைபெறுகிறது.

இதில், தம்புலாவில் நேற்று நடைபெற்ற போட்டியில் இந்தியா மற்றும் இலங்கை "ஏ" அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த இந்தியா "ஏ" அணி, 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 277 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து களமிறங்கிய இலங்கை "ஏ" அணி, 48.5 ஓவரில் 269 ரன்களுக்கு சுருண்டது. இதன் மூலம், இந்திய "ஏ" அணி 8 ரன்னில் திரில் வெற்றி பெற்றது.

86 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசம் அபார வெற்றி :

முதல் ஒருநாள் போட்டியில், 86 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று ஆஸ்திரேலியாவுக்கு வங்கதேசம் அதிர்ச்சியளித்தது. ஆஸ்திரேலியா - வங்கதேசம் இடையேயான முதல் ஒருநாள் போட்டியில், டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சை தேர்வு செய்தது.

முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி, 50 ஓவர்களில் 284 ரன்கள் குவித்தது. தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி, 42.2 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 191 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மழையால் ஆட்டம் தடைபட்டது. இதனால், டிஎல்எஸ் முறைப்படி வங்கதேச அணி 86 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இந்திய வீரர்கள் 2-வது சுற்றுக்கு முன்னேற்றம் :

ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீரர்கள் முதல் சுற்றில் வெற்றிபெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர். தலைநகர் சிட்னியில் நடைபெற்ற ஆண்கள் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் ஹரிஹரன் அம்சகருனன் - எம்.ஆர்.அர்ஜுன் ஜோடியும், அமெரிக்காவின் லீ ஆர்டன் குவான் - ஜிங் ஸ்டான்லி ஜோடியும் மோதின.

பரபரப்பான இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடி ஆதிக்கம் செலுத்திய அர்ஜுன் - அம்சகருனன் ஜோடி 21-க்கு 13, 21-க்கு 13 என்கிற நேர் செட் கணக்கில் வெற்றிபெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறியது.

இலங்கை - மேற்கிந்திய தீவுகள் இடையிலான டி20 தொடர் :

இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் பங்கேற்கும் மேற்கிந்திய தீவுகள் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இலங்கை அணி மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் செய்து ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் தொடர்களில் விளையாடி வருகிறது.

இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடர் நிறைவடைந்துவிட்ட நிலையில், டி20 தொடர் வரும் 12-ம் தேதி முதல் தொடங்குகிறது. இந்த சூழலில், டி20 தொடருக்கான மேற்கிந்திய தீவுகள் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. சாய் ஹோப் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

மைதானத்திலேயே சுருண்டு விழுந்த டென்மார்க் வீரர் :

சர்வதேச நட்புறவு கால்பந்து போட்டியில் திடீரென டென்மார்க் வீரர் மைதானத்திலேயே சுருண்டு விழுந்ததால் ஆட்டம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. 23-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி நாளை தொடங்கவுள்ள நிலையில், டென்மார்க் - உக்ரைன் அணிகள் இடையே சர்வதேச நட்புறவு போட்டி ஒடென்ஸ் நகரில் நடைபெற்றது.

இதில் டென்மார்க் 2-க்கு 1 என முன்னிலை வகித்தபோது அந்நாட்டு வீரர் 34 வயதான கிறிஸ்டியன் எரிக்சன் திடீரென மைதானத்தில் நிலைகுலைந்து விழுந்தார். இதனால் போட்டி பாதியிலேயே கைவிடப்பட்ட நிலையில், சிகிச்சைக்கு பிறகு அவர் உடல்நலம் தேறியுள்ளார்.

Related Link
ஐதராபாத் அணியின் கேப்டனாகும் இஷன் கிஷன்?

ஐதராபாத் அணியின் கேப்டனாகும் இஷன் கிஷன்?

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பிக்கப் வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட புகையிலை பொருட்கள்

1
27 mins agoshare
புகையிலை








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved