Also Watch
Read this
By: Manigandan Raja

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று கோவை மாவட்ட ஆட்சியர் பவன் குமார் நேரில் ஆய்வு பணியில் ஈடுபட்டார்.
தென்மேற்கு பருவமழை தொடங்கியிருக்கக்கூடிய நிலையில் மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரப் பகுதியில் உள்ள மேட்டுப்பாளையம் பகுதியில் மழை பாதிப்பு ஏற்படாமல் தவிர்க்க நீர் வழித்தடங்கள் மற்றும் தண்ணீர் தேங்காமல் இருக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இன்று அவர் ஆய்வு செய்தார்.
மேட்டுப்பாளையம் பகுதியில் இருந்து பவானி ஆற்றுப்பகுதிக்கு செல்லக்கூடிய நீர் வழி தடங்களை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் அதற்குப் பிறகு மேட்டுப்பாளையம் நகராட்சியில் பேரிடர் காலங்களில் பயன்படுத்தக்கூடிய உபகரணங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளதா என்பது குறித்தும் பார்வையிட்டார்.
தொடர்ந்து நகராட்சி அதிகாரிகளிடம் ஆலோசனை மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் மழை காலங்களில் ஒருங்கிணைந்து அனைத்து துறைகளும் செயல்பட்டு பொதுமக்களை பேரிடர்
காலங்களில் பாதுகாப்பது குறித்து முக்கிய ஆலோசனையும் நடத்தினார் இந்த நிகழ்வில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் சுனில் ஆனந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.