Also Watch
Read this
புதுச்சேரியில், இந்தியா கூட்டணி தோல்வி அடைந்து விட்டதாக, பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை விமர்சித்து உள்ளார்.

புதுச்சேரியில் அண்ணாமலை
புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரத்திற்காக, பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை புதுச்சேரி விமான நிலையத்திற்கு வந்த போது, கட்சி நிர்வாகிகள் மாலை அணிவித்து, உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அப்போது அண்ணாமலை கூறியதாவது;
புதுச்சேரியைப் பொறுத்தவரை உலகத்தில் எங்கும் இல்லாத விசித்திரமான கூட்டணி இது. காங்கிரஸ் கட்சி, கூட்டணி தர்மத்தை மீறி கூட்டணி கட்சிகள் போட்டியிடும் இடங்களிலும், வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டு உள்ளனர்.

கூட்டணிக்குள் ஒற்றுமை இல்லை
கூட்டணிக்குள் ஒற்றுமை இல்லை என்பதற்கான உதாரணம். அதேபோல், திமுக, விசிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கட்சிகள் இணைந்துள்ள இந்த கூட்டணியில் பரஸ்பர மரியாதை என்பதே இல்லை. 30 தொகுதிகளை கூட சரியான இடஒதுக்கீடு செய்து ஒற்றுமையாக செயல்படுத்த முடியாத இவர்கள், ஆட்சிக்கு வந்தால் மக்களுக்கு எப்படி நல்ல ஆட்சி செய்வார்கள்?

கூட்டணி அமைப்பதில் தோல்வி, வேட்பு மனு தாக்கல் செய்வதில் தோல்வி என்று, அனைத்திலும் இந்தக் கூட்டணி தோல்வி அடைந்து உள்ளது. தேர்தல் நாளில் இந்தக் கூட்டணி மிகப் பெரிய தோல்வியை சந்திக்கும், மக்கள் இவர்களுக்கு தக்க பதிலை வழங்குவார்கள்.
இவ்வாறு அண்ணாமலை தெரிவித்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved