news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews அடுத்தடுத்து மின் தடை - நோயாளிகள் கடும் அவதி
tv

Also Watch

tv

Read this

அடுத்தடுத்து மின் தடை - நோயாளிகள் கடும் அவதி

போடி, தேனி

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Theni

நோயாளிகள் கடும் அவதி :

தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் இன்று மதியம் சுமார் இரண்டு முப்பது மணி அளவில் பரவலாக காற்று வீசிய நிலையில் திடீர் மின்வெட்டு ஏற்பட்டது. சுமார் மூன்று மணி நேரம் தடைபட்ட மின்சாரம் மாலை ஐந்து முப்பது மணி அளவில் சரியான நிலையில் மீண்டும் இரவு எட்டு மணிக்கு மீண்டும் போடி நகர் முழுவதும் மின்சாரம் தடைப்பட்டு இருளில் சூழ்ந்தது .

ஒரு மணி நேரத்துக்கு மேலாக மின்சாரம் தடைப்பட்டு நிலையில் போடிநாயக்கனூர் அரசு மருத்துவமனையிலும் மின்சாரம் இல்லாமல் இருளில் மூழ்கியது. இதனால் நோயாளிகளை சந்திக்க வந்த பொதுமக்கள் பெரிதும்
அவதிக்குள்ளாகினர்.

அவசர சிகிச்சை பிரிவு மற்றும் மகளிர் மகப்பேறு பிரிவில் மட்டும் ஜெனரேட்டர் மூலம் மின்சாரம் இயக்கப்பட்டத நிலையில் பொது நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் இருளில் கொசுக்கடியில் மருத்துவமனை வளாகத்தில் காத்திருக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டது.

சுமார் ஒரு மணி நேரத்திற்கு பின்பு மின்சாரம் வந்த நிலையில் வெளியே நின்று கொண்டிருந்த குழந்தை பெற்ற பெண் ஒருவர் மீண்டும் தனது அறைக்கு திரும்பினார். இன்று சுமார் 4 மணி நேரத்துக்கு மேல் போடிநாயக்கனூர் சுற்றுப்பகுதியில் மின் தடை ஏற்பட்டு இருளில் மூழ்கியதால் பொதுமக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகினர்.

Related Link
கிறிஸ்தவர்களின் குருத்தோலை பவனி

கிறிஸ்தவர்களின் குருத்தோலை பவனி



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

முதன்முதலாக இரவு நேர பயணிகள் விமான சேவை தொடக்கம்

0
1 hr 22 mins agoshare
தூத்துக்குடி இரவு விமானம்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved