Also Watch
Read this
By: Fyrose Banu

எளிய மக்களை பெரிய உயரத்தில் உட்கார வைத்தவர் தான் நம் தமிழ்நாடு முதலமைச்சர் தமிழக வெற்றி கழகத்தை பொருத்தவரை யார் வேண்டுமானாலும் கீழே இருந்து மேடைக்கு வரலாம் மேடையில் இருந்து கீழே இறங்கலாம் அவரவர்களுக்கு வழங்கப்படும் பொறுப்பில் கண்ணியமாக நடந்து கொள்ள வேண்டும் என கட்சி நிர்வாகிகளுக்கு அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் வேண்டுகோள் விடுத்தார்.

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கோவளம் ஊராட்சியில் கோவளம் ஊராட்சி நிர்வாகம் மற்றும் எஸ் டி எஸ் தனியார் தொண்டு நிறுவனம் இணைந்து அப்பகுதி மாணவர்களுக்கு தளபதி வெற்றி கல்வி மையம் மாணவர்களுக்கான இலவச கல்வி பயிற்சி மையம் திறப்பு விழா கோவளம் ஊராட்சி மன்ற தலைவர் சோபனா தங்கம் சுந்தர் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளரும் தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சருமான புஸ்ஸி ஆனந்த் கலந்து கொண்டு மாணவர்களுக்கான இலவச பயிற்சி மையத்தினை திறந்து வைத்து பொதுமக்களிடையே உரையாடினார்.
கல்வி விருது வழங்கிய ஒரே தலைவர் நம் தளபதி மட்டும் தான்
பல ஆண்டுகளாக தமிழ்நாடு முதலமைச்சரின் அறிவுறுத்தலின்படி தளபதி கல்வி மையம் பொதுமக்களுக்கு தேவையான நலத்திட்ட உதவிகள் ரத்த தானம் கண் தானம், ரொட்டி, பால், முட்டை திட்டம், விலையில்லா விருந்தகம், போன்ற திட்டங்களை செய்துதான் இப்பொழுது அமைச்சராக ஆகியிருக்கிறோம். உலகத்திலேயே 16 மணி நேரம் நின்னபடியே பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு கல்வி விருது வழங்கிய ஒரே தலைவர் நம் தளபதி மட்டும் தான். நானும் எங்களது அமைச்சர்களோ அல்லது சட்டமன்ற உறுப்பினர்களோ, பொருள் செய்ய மாட்டோம் அப்படி செய்தால் எங்களது முதலமைச்சர் எங்களை இந்த பதவியில் வைத்திருக்க மாட்டார் ஆகையால் நிச்சயமாக நாங்கள் ஊழல் செய்ய மாட்டோம் எனக்கூறினார்.
யார் வேண்டுமானாலும் இந்த மேடைக்கு மேலே வரலாம்
ஒரு சாதாரண தொண்டனை கட்சியின் துணைப் பொதுச் செயலாளராக அறிவித்திருக்கிறார் என்றால் அதுதான் நம் கட்சியின் தலைவர் தளபதி தமிழ்நாட்டில் உள்ள பல கட்சிகளில் 30, 40 வருடங்களாக ஒரே நபர் தான் அதே பொறுப்பில் இருப்பார் ஆனால் தமிழக வெற்றி கழகத்தில் மட்டும்தான் யார் வேண்டுமானாலும் இந்த மேடைக்கு மேலே வரலாம் யார் வேண்டுமானாலும் மேடை விட்டு கீழே போகலாம் ஆகையால் நாம் மிகவும் கவனத்துடன் பணியாற்ற வேண்டும் என தொண்டர்களுக்கு எச்சரித்தார். இந்த நிகழ்ச்சியில் கழகத் துணை பொது செயலாளர் மரகதம் குமரவேல், தினகரன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved