Also Watch
Read this
By: Manigandan Raja

போதை ஆசாமிகள் தகராறு :
சென்னை தண்டையார்பேட்டை பகுதியை சேர்ந்தவர் நாகராஜ் இவர் தன் குடும்பத்தார் பத்துக்கும் மேற்பட்டோருடன் கோடை விடுமுறையை முன்னிட்டு சுற்றுலா சென்று மீண்டும் வீடு திரும்ப பூந்தமல்லி பேருந்து நிலையத்திற்கு வந்துள்ளார்.
அப்போது பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த தடம் எண் 101X பேருந்து பக்கவாட்டு எண் TWK 0801 பேருந்தில் ஏறி உள்ளனர் அப்போது முன் பக்க இருக்கையில் அடுத்தடுத்து அமர்ந்திருந்த மூன்று நபர்கள் மது அருந்தி இருந்ததாக கூறப்படும் நிலையில் அவருக்கும் நாகராஜ் குடும்பத்தாருக்கும் பேருந்தில் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனால் பேருந்து மற்றும் பேருந்து நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது சண்டையை விலக்கி விட்ட போக்குவரத்து ஊழியர்கள் நாகராஜ் குடும்பத்தாரை பேருந்தில் இருந்து இறக்கி விட்டதாகவும் இதனால் ஆத்திரமடைந்த நாகராஜ் குடும்பத்தார் பேருந்து நிலைய நேர காப்பாளர் அலுவலக அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து அவர்கள் கூறுகையில் மது போதை ஆசாமிகளுக்கு ஆதரவாக செயல்பட்டு பெண் பிள்ளைகளை வைத்துக் கொண்டிருக்கும் எங்கள் குடும்பத்தாரை பேருந்தில் இருந்து இறக்கிய ஊழியர்கள் மீது விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved