செங்கல்பட்டு மாவட்டம் கொக்கிலமேடு மீனவ கிராமத்தில் பெண் ஊராட்சி துணை தலைவரின் வீட்டு ஜன்னல் கண்ணாடி, இரு சக்கர வாகனத்தை அடித்து சேதப்படுத்திய வழக்கில் 8 பேரை போலீசார் கைது செய்தனர். ஊராட்சி துணை தலைவர் உள்ளிட்ட 7 குடும்பத்தை பஞ்சாயத்தார் ஊரை விட்டு ஒதுக்கி வைத்ததாக கூறப்படும் நிலையில், ஊரை காலி செய்வில்லை என பஞ்சாயத்து தரப்பில் தாக்குதலில் ஈடுபட்டனர்.