news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவதாக பதிவிட்டவர் மீது தாக்குதல்
tv

Also Watch

நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவதாக பதிவிட்டவர் மீது தாக்குதல்

ஏரியூர், தருமபுரி

25

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
DMP Attack

பதிவிட்டவர் மீது தாக்குதல் :

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த ஏரியூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஈச்சம்பாடி கிராமத்தில் சாமிக்கண்ணு வயது 55 என்பவர் கடந்த 10 வருடங்களாக தண்ணீர் பாட்டில் கம்பெனி வைத்து நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் தண்ணீர் கம்பெனிக்கு தினம் தோறும் அதிக அளவில் நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவதால் சுற்றி உள்ள கிராம பகுதிகளில் நிலத்தடி நீர் இல்லாத சூழல் உருவாகி வருவதாகவும் அருகிலுள்ள ஏரிகளில் மழைக்காலங்களில் நிறம்பும் தண்ணீரானது உடனடியாக வற்றிப் போகிறது என்ற தகவலை சோழப்பாடி கிராமத்தைச் சேர்ந்த ராஜசேகர் 35என்பவர் சமூக வலைதளங்களில் பதிவிட்டு உள்ளார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை ஏரியூர் மூன்று ரோடு சந்திப்பில் உள்ள பேக்கரி ஒன்றில் ராஜசேகர் சென்றுள்ளார். அவரைப் பின் தொடர்ந்து சென்ற வாட்டர் கம்பெனி உரிமையாளர் சாமி கண்ணு மற்றும் அஜ்னஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த சூரிய பிரகாஷ் ஆகியோர் அடியாட்களை வைத்து ராஜசேகரை பேக்கரி கடையிலேயே சரமாரியாக தாக்கி உள்ளனர்.

இதில் பலத்த காயமடைந்த ராஜசேகர் பென்னாகரம் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ராஜசேகரை வாட்டர் கம்பெனி உரிமையாளர் சாமிக்கண்ணு அடியாட்களை வைத்து பேக்கரி கடையில் தாக்குதல் நடத்திய சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

இது சம்பந்தமாக ராஜசேகர் அளித்த புகாரின் பேரில் சாமி கண்ணு வயது 55,சூரிய பிரகாஷ் வயது 32, சரவணனகுமார் - 26, மணிகண்டன் 36, மதன்குமார் 33, முருகேசன் 43 உட்பட 6 பேர் மீது ஏரியூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Link
சாலை மறியலில் ஈடுபட்ட மாணவரின் உறவினர்கள்

சாலை மறியலில் ஈடுபட்ட மாணவரின் உறவினர்கள்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

Royal Enfield நிறுவனத்தின் Flying Flea

3
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved