Also Watch
Read this
Posted on: Mar 25, 2026 03:28 PM
By: Manigandan Raja

சாலை மறியலில் :
திருப்பூர் குமரானந்தபுரத்தை சேர்ந்தவர் வெங்கடேஸ்வரன் இவருக்கு 2 மகன்கள் உள்ளனர் அதில் மூத்த மகன் வேதராஜன் (18) கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு பட்டப்படிப்புபயின்று வருகிறார்.
தினமும் திருப்பூரில் இருந்து கோவைக்கு ரயில் மூலம் சென்று வரும் கல்லூரி மாணவனாக வேதராஜன் நேற்று வழக்கம்போல ரயிலில் செல்வதற்கு பிளாட்பாரத்தில் சென்றபோது ரெயில் புறப்பட்டு விட்டது,பிளாட்பாரத்தில் ஒடி சென்று ரயிலில் ஏற முயன்ற போது கால் தவறி பிளாட்பாரத்திற்கும் இரயிலுக்கும் இடையில் கல்லூரி மாணவன் சிக்கி கொண்டார்.
இதனிடையே இரயிலானது சிறிது தூரம் வேகமாக சென்றதால் இடைவெளியில் சிக்கிய மாணவனின் காலானது முறிவு ஏற்பட்டு இரத்தம் வழிந்தது அருகில் இருந்தவர்கள் பிளாட்பாரத்தில் சிக்கிய கல்லூரி மாணவனை மீட்டனர் ,உடனடியாக ரயில் நிறுத்தப்பட்டது.
இந்த நிலையில் அங்கு வந்த தமிழக இரும்பு பாதை ரயில்வே போலீசார் கல்லூரி மாணவனுக்கு சிகிச்சை வழங்காமல் அரை மணி நேரத்திற்கு மேலாக மாணவனின் விவரங்களை சேகரித்துள்ளனர், அதனைத் தொடர்ந்து அங்கு ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
அங்கு அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்ட கல்லூரி மாணவனுக்கு காலில் கட்டு மட்டும் போடப்பட்டு குளுக்கோஸ் ஏற்றப்பட்டது, அங்கிருந்த செவிலியர் மட்டுமே இதனை சிகிச்சை வழங்கியுள்ளனர்.
மருத்துவர்கள் யாரும் வரவில்லை கால் முறிவு ஏற்பட்ட இடத்தில் ரத்தம் அதிக அளவில் வெளியேறியதால் அரை மணி நேரத்திற்கு மேலாக போதுமான சிகிச்சை வழங்காததால் உறவினர்கள் கல்லூரி மாணவனை கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் வேன் மூலம் மாணவனை அழித்துக் கொண்டு சென்றபோது வழியிலேயே சிகிச்சைக்கு பலனளிக்காமல் கல்லூரி மாணவன் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த கல்லூரி மாணவணின் உறவினர்கள் கூறுகையில், ரயில் நிலையத்தில் உள்ள போலீசார் தாமதமாக கல்லூரி மாணவனை ஆம்புலன்ஸ் மூலம் ஏற்றி அனுப்பி உள்ளனர், இதனால் கால் முறிவு ஏற்பட்ட மாணவனின் காலில் இருந்து அதிக அளவில் ரத்தம் வெளியேறி உள்ளது, மேலும் திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சரிவர சிகிச்சை வழங்கப்படாததால்.
கல்லூரி மாணவன் தற்போது உயிரிழந்துள்ளார் என வேதனையுடன் தெரிவித்தனர். எஸ் எஃப் ஐ மாணவர்கள் மற்றும் உறவினர்கள் திருப்பூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முன்பாக சாலை மறியலில் ஈடுபட்டனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved