திருப்பத்தூர் மாவட்டம், புத்தாகரம் கிராம நிர்வாக அலுவலகம் முன்பு பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்ற நபர்களால் பரபரப்பு ஏற்பட்டது. பள்ளக்கொல்லி பகுதியை சேர்ந்த சிங்காரம் மற்றும் வேட்டப்பட்டை சேர்ந்த மாரிப்பன் ஆகிய இருவருக்கும் சொந்தமான இடத்திற்கு பட்டா கேட்டு இருவரும் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.