news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews நாகையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் படகுப் பேரணி
tv

Also Watch

tv

Read this

நாகையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் படகுப் பேரணி

நாகப்பட்டினம்

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
நாகப்பட்டினம் படகு பேரணி

மாவட்ட நிர்வாகம் சார்பில் படகுப் பேரணி :

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் சட்டமன்ற தேர்தல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அதன்படி நாகப்பட்டினம் மாவட்டத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் 100% வாக்குப்பதிவு செய்வதின் அவசியத்தை வலியுறுத்தியும் தேர்தல் நேர்மையாகவும், அச்சமின்றி நடைபெற பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில்.

மீனவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நாகை கப்பல்படை துறைமுகத்திலிருந்து அக்கரைப்பேட்டை மீன்பிடி இறங்குதளம் வரையில் விழிப்புணர்வு படகு பேரணி நடைபெற்றது. இதனை மாவட்ட வருவாய் அலுவலர் பவணந்தி தொடங்கி வைத்தார்.

படகில் வருவாய் கோட்டாட்சியர் சங்கரநாராயணன், மீன்வளத்துறை இணை இயக்குனர் ஷர்மிளா, ஆட்சியர் நேர்முக உதவியாளர் அரங்கநாதன், மீன்வளத்துறை உதவி இயக்குனர், மீனவர்
நலத்துறை அலுவலர்கள் மற்றும் அக்கரைபேட்டை, கீச்சாங்குப்பம் மற்றும் கல்லார் மீனவர் பஞ்சாயத்தார்கள் உள்ளிட்டோர் கடலில் படகு மூலம் பயணித்து மீனவர்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கினர்.

மேலும் துறைமுகத்தில் இருந்த மீனவர்களுடன் தேர்தல் குறித்து விளக்கி கூறியதுடன் தேர்தல் நேர்மையாகவும் 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்பட்டது.

Related Link
நாகையில் இறந்த ஆசிரியருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

நாகையில் இறந்த ஆசிரியருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இன்றைய சினி நியூஸ்

0
2 mins agoshare
சினி நியூஸ்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved