திருப்பத்தூரில் மசாஜ் சென்டரில் கை வரிசை காட்டிய எல்லை பாதுகாப்பு படை வீரர் கைது செய்யப்பட்டார். கல்நார்சம்பட்டி கிராமத்தை சேர்ந்த மயில்வாகனன் எல்லை பாதுகாப்பு படை வீரராக பணியாற்றி வரும் நிலையில், விடுமுறைக்கு வீட்டிற்கு சென்றவர், கிருஷ்ணகிரி சாலையில் உள்ள மசாஜ் சென்டருக்கு சென்று டிஎஸ்பி 50 ஆயிரம் ரூபாய் கேட்டதாக கூறி பணம் கேட்க, ஸ்பா உரிமையாளர் அளித்த தகவலின் பேரில் அவர் கைது செய்யப்பட்டார். விசாரணையில் மது அருந்த பணம் இல்லாததால் பணம் கேட்டது தெரியவந்தது.