Also Watch
Read this
By: Manigandan Raja

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த கூனவேலம்பட்டிபுதூர் பகுதியில் உள்ள தெருக்களில் இரவு நேரங்களில் வீடுகளை நோட்டமிட்டு வரும் முகமூடி அணிந்த மர்ம நபர்களால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
நேற்று இரவு சுமார் 2 மணி அளவில் வீடுகளை நோட்டமிட்டுக் கொண்டிருந்த மர்ம நபர்கள், ஆட்கள் வருவதை கண்டதும் அங்கிருந்து தப்பி ஓடிய சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
முகமூடி அணிந்த நபர்கள் யார் என்பது குறித்து பொதுமக்கள் மத்தியில் அச்சம் நிலவி வருகிறது. இதனால், இரவு நேரங்களில் வீட்டை விட்டு வெளியே வரவே அச்சமாக இருப்பதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இதுகுறித்து புதுச்சத்திரம் காவல் நிலையத்தில் பொதுமக்கள் புகார் அளித்து, வீடுகளை நோட்டமிடும் முகமூடி கொள்ளையர்களை உடனடியாக கண்டறிந்து கைது செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். தொடர்ந்து இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க இரவு நேரங்களில் போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved