கரூர் மாவட்டம் குளித்தலை அருகே ஆர்.டி.மலை பகுதியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியை, கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து விசாரித்து வரும் சிபிஐ அதிகாரிகள் கண்டு களித்தனர். போட்டியில் நாமக்கல், திருச்சி, கரூர், புதுக்கோட்டை, தஞ்சை மாவட்டங்களைச் சேர்ந்த 386 வீரர்களும், 685 காளைகளும் பங்கேற்றனர். அப்போது ஜல்லிக்கட்டு போட்டி பற்றி சிபிஐ அதிகாரிகளிடம் மாவட்ட ஆட்சியர் விளக்கினார்.இதையும் படியுங்கள் : தண்ணீர் கேட்பது போல் நாடகம்..