Also Watch
Read this
By: Web Team

சென்னைக்கு முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் செம்பரம்பாக்கம் ஏரி முழு கொள்ளளவை எட்டிய நிலையில், உபரி நீர் வெளியேறி ஏரிக்கரையை ஒட்டியுள்ள நந்தம்பாக்கம் அம்பேத்கர் நகரை சூழ்ந்துள்ளது. பெரும்பாலான வீடுகள் பாதியளவு வரை நீரில் மூழ்கியதால் குடியிருப்புவாசிகள் வீடுகளை பூட்டிவிட்டு உறவினர்கள் வீடுகளில் தஞ்சமடைந்ததாக கூறப்படுகிறது. ஊரே தனித் தீவாக மாறியுள்ள நிலையில், பள்ளி, கல்லூரி மற்றும் வேலைக்கு செல்பவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். குடியிருப்புகளை சூழ்ந்த தண்ணீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved