news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews குழந்தையை கடத்த முயன்ற இளைஞரை பிடித்த பொதுமக்கள்
tv

Also Watch

tv

Read this

குழந்தையை கடத்த முயன்ற இளைஞரை பிடித்த பொதுமக்கள்

அருணகிரிபுரம், திருவண்ணாமலை

8

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
TVM Kidnap

குழந்தையை கடத்த முயற்சி :

திருவண்ணாமலை அடுத்த அருணகிரிபுரம் பகுதியில் தெருவில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தையிடம் மர்ம நபர் ஒருவர் பேச்சு கொடுத்த உள்ளார். குழந்தை பயத்தில் கத்தவே சுமார் 30 அடி தூரத்தில் இருந்த தாய் வீட்டிற்கு செல்லும்படி கூச்சலிட்டு பின்னால் ஓடி வந்துள்ளார்.

அப்போது அந்த மர்ம நபர் குழந்தையை விரட்டிக் கொண்டு வீட்டுக்குள் சென்று குழந்தை பயத்தில் கத்தியுள்ளது. வீட்டுக்குள் இருந்த தந்தை குழந்தையின் அலறல் கேட்டு ஓடி வந்தவுடன் செய்வதறியாமல் அடையாளம் தெரியாத நபர் திரு திரு என முழித்துள்ளார்.

சாலையில் இருந்து ஓடி வந்த தாயின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் திரண்டு அந்த மர்ம நபரை இரண்டு சாத்து சாத்தியதாக சொல்லப்படுகிறது. பின்னர் அந்த நபரை பிடித்து வைத்து போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

அங்கு விரைந்து வந்த போலீசார் அந்த நபரை விசாரணை செய்யாமல் பிடித்து வைத்தவர்களிடம் அந்த நபரை அடித்தீர்களா அவருக்கு ஏதாவது ஆனால் உங்கள் மீதுதான்
வழக்கு போடுவேன் என்று மிரட்டியதாக சொல்லப்படுகிறது.

குழந்தை கடத்தல் சம்பவம் சமூக வலைதளத்தில் வைரலாக பரவ தொடங்கியவுடன் செய்தி சேகரிக்க சென்ற நம்மிடம் சார் புரளி எல்லாம் ஏன் பெருசாக்கிறீங்க விடுங்க இது ஒரு புரளி என விசாரணையை துவங்குவதற்கு முன்பே விசாரணையை முடித்து வைத்து பேசிய போலீசாரின் செயல் அங்கிருந்தவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து அங்கு இருந்த பாதிக்கப்பட்ட குழந்தையின் தாயிடம் விசாரித்த போது அவர் கூறியதை கேட்டதும் திடுக்கிட வைத்தது. கடந்த மாதம் ஜனவரி முதல் இரண்டு வாரத்தில் தலைநகரான டெல்லியில் 807 பேர் காணாமல் போய் உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது.

அதிலும் குறிப்பாக 509 பெண்கள் மற்றும் குழந்தைகள் காணாமல் போகிய அதிர்ச்சி தகவல் வெளியாகி ஏற்படுத்தியுள்ளது மேலும் இந்த சம்பவத்தில் 298 ஆண்களும் காணாமல் போகி உள்ளதாக
டெல்லியில் ஒரு ஏஜென்சி டெல்லி போலீஸ் ஆவணங்களை மேற்கோள் காட்டி செய்தியாக வெளியிட்டு இருப்பதாகவும்.

மேலும் கடந்த ஆண்டு டெல்லியில் 24 ஆயிரத்து 508 பேரும் இதில் 60% பெண்கள் என சொல்லப்படுகிறது. கடந்த ஓராண்டில் டெல்லியில் 9007 பேர் இன்னும் கண்டுபிடிக்க முடியாமல்
இருப்பதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கக்கூடிய நிலையில்.

திருவண்ணாமலையில் வடமாநில இளைஞர் சாலையில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தையை வீட்டுக்குள் விரட்டிச் சென்று தூக்கிச் செல்லம் என்றதாக பெற்றோர்களே சொல்லும்
நிலையில் விசாரணையை கூட தொடங்காமல் போலீசார் அந்த பரபரப்பு அடங்குவதற்கு உள்ளாக அது ஒரு வதந்தி என அதே இடத்தில் நின்று கொண்டு சொன்ன சம்பவம் திருவண்ணாமலை மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

திருவண்ணாமலை மாவட்டத்தை பொருத்தவரையில் காவல்துறையினர் சமீப காலமாக செய்வது என்னவென்றால் ஏதேனும் புகார்கள் வந்தால் அது மனநல பாதிக்கப்பட்டவர் அல்லது புரளி எனக் கூறி தட்டிக் கழிக்கும் போக்கினை கடைபிடிப்பது திருவண்ணாமலை மக்களிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

தினந்தோறும் வெளிமாநிலத்தில் இருந்து நூற்றுக்கணக்கானோர் திருவண்ணாமலைக்கு வந்து செல்கின்றனர் அப்படிப்பட்ட சூழ்நிலையில் காவல் நிலையம் அதிகரித்த நிலையில் போலீசார் விழிப்போடு செயல்படாமல் அலட்சியப்போக்கோடு பணியாற்றுவது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Link
அதிமுக Ex அமைச்சருடன் திமுக மா.செ., டீல்

அதிமுக Ex அமைச்சருடன் திமுக மா.செ., டீல்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ.1,200 குறைவு

2
37 mins agoshare
இன்றைய தங்கம் விலைbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved