news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews அதிமுக Ex அமைச்சருடன் திமுக மா.செ., டீல்
tv

Also Watch

tv

Read this

அதிமுக Ex அமைச்சருடன் திமுக மா.செ., டீல்

வாக்காளப் பெருமக்களே... தேர்தல் 2026

33

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

ஹாட்ரிக் வெற்றி பெற்று குமாரபாளையம் தொகுதியை தனது கண் அசைவில் வைத்திருக்கும் முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு எதிராக, திமுக நகராட்சி சேர்மன் விஜய கண்ணன் களமிறங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சுயேட்சையாக போட்டியிட்டு நகராட்சி சேர்மன் நாற்காலியை பிடித்த விஜய கண்ணன், தங்கமணிக்கு எதிராக திமுக வேட்பாளராக நிற்க தயாராக இருக்கும் நிலையில், சொந்த கட்சியிலேயே குழிபறிக்கும் வேலைகள் நடப்பதால் சிக்கல் எழுந்திருக்கிறது.

திமுகவில் யார் நிற்கிறார்?
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது. எந்தெந்த தொகுதியில் யார் யார் வேட்பாளராக நிற்க வாய்ப்பு என தகவல் வெளியாகி வரும் நிலையில், நாமக்கல் மாவட்டம், குமார பாளையம் தொகுதியில் சுடச்சுட அப்டேட் கிடைத்துள்ளது. குமாரபாளையம் தொகுதியில் கடந்த மூன்று தேர்தல்களாக தங்கமணி தான் வெற்றி பெற்று வருகிறார். 15 ஆண்டுகளாக குமாரபாளையம் தொகுதியை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார் முன்னாள் அமைச்சர் தங்கமணி. இந்த நிலையில், வருகிற தேர்தலிலும் குமாரபாளையம் தொகுதியில் தான் தங்கமணி களம் காண்கிறார் என்ற நிலையில், அவரை எதிர்த்து திமுகவில் யார் நிற்கிறார் என்ற தகவல் கிடைத்துள்ளது.

தங்கமணிக்கு எதிராக விஜய கண்ணன்
குமாரபாளையம் நகராட்சி சேர்மனாக இருக்கும் விஜய கண்ணன் தான் தங்கமணியை எதிர்த்து போட்டியிட முடிவு செய்திருக்கிறாராம். சுயேச்சையாக போட்டியிட்டு நகராட்சி சேர்மன் ஆன விஜய கண்ணன், தனது ஆதரவு கவுன்சிலர்களுடன் திமுகவில் ஐக்கியமானார். திமுகவில் விஜய கண்ணனுக்கு நகர செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டு இருக்கும் நிலையில், வருகிற தேர்தலில் தங்கமணிக்கு எதிராக விஜய கண்ணன் போட்டியிடலாம் என சொல்லப்படுகிறது. குமாரபாளையம் தொகுதியில் முதலியார் மற்றும் செட்டியார் சமூகத்தினர் பெரும்பான்மையாக வசித்து வருகிறார்கள் என்ற நிலையில், முதலியார் சமூகத்தை சேர்ந்த விஜய கண்ணனை நிறுத்துவது பலனளிக்கும் என திமுக தலைமையும் கணக்கு போடுவதாக சொல்கிறார்கள்.

தங்கமணியுடன் UNDER DEALING?
திமுக, அதிமுக வேட்பாளர்களுக்கு மத்தியில் சுயேச்சையாக போட்டியிட்டு கவுன்சிலர் ஆகி, நகராட்சி சேர்மன் பதவியையும் கைப்பற்றிய விஜய கண்ணனுக்கு, குமாரபாளையம் தொகுதியில் இளைஞர்கள் ஆதரவு இருக்கும் நிலையில், அந்த ஆதரவை வைத்து தங்கமணிக்கு எதிராக நிற்க வைக்கலாம் என்பது திமுக தலைமையின் யோசனையாக உள்ளது. ஒரு பக்கம் முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு எதிராக தன்னை விஜய கண்ணன் முன்னிறுத்தி வரும் நிலையில், இன்னொரு பக்கம் விஜய கண்ணனுக்கு சீட்டு கொடுக்கக் கூடாது என்ற குரல்களும் திமுகவில் எழ தொடங்கியிருக்கிறது. அதாவது, குமாரபாளையம் திமுகவில் இருக்கும் நிர்வாகிகள் முன்னாள் அமைச்சர் தங்கமணியுடன் UNDER DEALINGல் இருப்பதாக சொல்லப்படுகிறது.

தங்கமணிக்கு எதிராக நிற்கக் கூடாது
குறிப்பாக, நாமக்கல் திமுகவின் மேற்கு மாவட்ட செயலாளர் கே.எஸ்.மூர்த்தி, முன்னாள் அமைச்சர் தங்கமணியுடன் அவ்வளவு நெருக்கமாம். திமுகவில் இருந்து யாரும் தங்கமணிக்கு எதிராக நிற்கக் கூடாது என்பதில் கண்ணும், கருத்துமாக இருக்கிறாராம். இதனால், வருகிற தேர்தலில் தாம் கை காட்டும் நபருக்கு தான் சீட்டு கொடுக்க வேண்டும் என தலைமையிடம் கே.எஸ்.மூர்த்தி வலியுறுத்தி வருவதாக சொல்லப்படுகிறது.

திமுகவினர் மாய்ந்து மாய்ந்து வேலை
இத்தனை ஆண்டுகளாக வேண்டுமென்றே டம்மியான வேட்பாளரை நிறுத்தி தங்கமணியை வெற்றி பெற வைக்க, திமுக மாவட்ட செயலாளர் கே.எஸ்.மூர்த்தி உடந்தையாக இருப்பதாக பேசிக் கொள்ளப் படுகிறது. வருகிற தேர்தலிலும் அதே யுக்தியை வைத்து வெப்படை செல்வராஜ் என்பவருக்கு கே.எஸ்.மூர்த்தி சீட்டு கேட்கிறாராம். ஏற்கனவே ஒரு முறை தங்கமணியை எதிர்த்து நின்று தோல்வியுற்ற வெப்படை செல்வராஜுக்கு மக்கள் மத்தியிலும் பெரிய செல்வாக்கு இல்லை என்ற நிலையில், அதிமுகவின் தங்கமணியை ஜெயிக்க வைக்க திமுகவினர் மாய்ந்து மாய்ந்து வேலை செய்து வருவதாக சொல்கிறார்கள் குமாரபாளையம் குடியிருப்புவாசிகள்.

குமாரபாளையம் தொகுதி யாருக்கு?
இதனாலேயே, விஜய கண்ணன் மீது தலைமைக்கு புகார்களை வாசிக்க தொடங்கியிருக்கிறார்கள் திமுக நிர்வாகிகள். விஜய கண்ணனை ஒதுக்கி விட்டு கட்சி நிகழ்ச்சிகளை நடத்தும் மாவட்ட செயலாளர் தரப்பு, விஜய கண்ணன் தவறு செய்தது போல ஒட்டு மொத்தமாக குற்றம்சாட்டி புகார் கடிதம் அனுப்பி வருவதாக சொல்லப்படுகிறது. இந்த முறையாவது குமாரபாளையம் தொகுதி திமுக வசமாகும் என நம்பிக் கொண்டிருந்த பாரம்பரிய திமுகவினருக்கு, மாவட்ட செயலாளர் கே.எஸ்.மூர்த்தி தரப்பின் நடவடிக்கை பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Related Link
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,000ஆக உயர்வு

மகளிர் உரிமைத் தொகை ரூ.2,000ஆக உயர்வு

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தரைப்பாலம் கட்டித்தர வலியுறுத்தி கிராமத்தினர் போராட்டம்

1
5 hrs 21 mins agoshare
தர்மபுரி தேர்தல் புறக்கணிப்பு








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved