news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews 20 ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் பணி நீக்கம் எதிர்ப்பு தெரிவித்து சக ஊழியர்கள் போராட்டம்
tv

Also Watch

tv

Read this

20 ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் பணி நீக்கம் எதிர்ப்பு தெரிவித்து சக ஊழியர்கள் போராட்டம்

மயிலாடுதுறை

26

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
மயிலாடுதுறை போராட்டம்

பணி நீக்கம் எதிர்ப்பு தெரிவித்து சக ஊழியர்கள் போராட்டம் : 

மயிலாடுதுறை அரசினர் பெரியார் மாவட்ட தலைமை மருத்துவமனையில் ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் 70 பேர் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், ஏற்கெனவே இருந்த ஒப்பந்த நிறுவனம் மாற்றப்பட்டு, புதிய ஒப்பந்த நிறுவனம் இன்றுமுதல் பொறுப்பேற்றுள்ளது.

புதிதாக ஒப்பந்தம் பெற்றுள்ள சுமீத் நிறுவனம் ஏற்கெனவே பணியில் இருந்த 70 பேரில் 20 பேரை முன்னறிவிப்பு இன்றி பணி நீக்கம் செய்து அறிவித்துள்ளது. மேலும், புதிதாக 50 பேரை பணியில் சேர்த்துள்ளது.

ஒப்பந்த நிறுவனத்தின் இந்த அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து பணி நீக்கம் செய்யப்பட்ட தூய்மைப் பணியாளர்களுக்கு ஆதரவாக மற்ற 50 பணியாளர்களும் பணிகளை புறக்கணித்து மருத்துவமனை வளாகத்திலேயே உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், புதிதாக பணியில் சேர்க்கப்பட்ட 50 பேரையும் அவர்கள் பணிக்கு செல்லவிடாமல் தடுத்து நிறுத்தினர். தொடர்ந்து, அனைத்துப் பணியாளர்களையும் பணிக்கு செல்ல அனுமதிக்க வேண்டும் என ஏஐசிசிடியு மாநில
செயலாளர் வீரசெல்வன் தலைமையில் உழைப்போர் உரிமை இயக்கத்தின் கிளையான அரசு பெரியார் மருத்துவமனை துப்புரவு பணியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு கோரிக்கையை வலியுறுத்தினர்.

Related Link
தாலியை கழற்றி எறிந்து விட்டு இளம் பெண் கதறல்

தாலியை கழற்றி எறிந்து விட்டு இளம் பெண் கதறல்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இளம்பெண்ணிடம் பா*யல் அத்துமீறிலில் ஈடுபட்ட வடமாநில இளைஞர்

0
9 mins agoshare
சாலை மறியல்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved