news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews கடந்த 40 நாட்களாக குடிநீர் வரவில்லை எனப் புகார்
tv

Also Watch

tv

Read this

கடந்த 40 நாட்களாக குடிநீர் வரவில்லை எனப் புகார்

திண்டுக்கல் - ஏ.வெள்ளோடு

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
திண்டுக்கல் தண்ணீர் பிரச்சனை

குடிநீர் வரவில்லை எனப் புகார்  :

திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி அருகே ஏ.வெள்ளோடு ஊராட்சி கிழக்குத் தெரு பகுதியில் சுமார் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருவதாகவும் இப்பகுதியில் கடந்த 40 நாட்களாக ஊராட்சி நிர்வாகத்தால் வழங்கப்படும் குடிநீர் வழங்கப்படவில்லை எனவும் கூறப்படுகிறது.

மேலும் இப்பகுதி பொதுமக்கள் குடிநீர் மற்றும் பயன்பாட்டுக்கு ஒரு குடம் பத்து ரூபாய் முதல் 15 ரூபாய் வரை பணம் கொடுத்து வண்டிகளில் தண்ணீர் வாங்குவதாகவும் தெரிவிக்கின்றனர். தொடர்ந்து ஊராட்சி நிர்வாகம் மற்றும் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளிடம் தண்ணீர் கேட்டு பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறி இன்று காலை பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு வந்த அரசு பேருந்தையும் சிறை பிடித்து போராட்டம் நடத்தினர். மேலும் ஊராட்சி நிர்வாகம் உடனடியாக தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் கூலி வேலைக்கு செல்லும் இப்பகுதி பொதுமக்கள் தண்ணீர் விலைக்கு வாங்கி பயன்படுத்தக் கூடிய அவல நிலை ஏற்பட்டுள்ளது.

மாவட்ட நிர்வாகம் தலையிட்டு தண்ணீர் தருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லை என்றால் தொடர்ந்து போராட்டம் நடத்துவோம் என்று கூறி போராட்டம் நடத்தினர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அம்பாத்துறை போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

Related Link
கோபிசெட்டிபாளையத்தில் செங்கோட்டையன் வேட்புமனு தாக்கல்

கோபிசெட்டிபாளையத்தில் செங்கோட்டையன் வேட்புமனு தாக்கல்



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கிறிஸ்தவர்களின் குருத்தோலை பவனி

0
13 mins agoshare
சென்னை குருத்தோலை








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved