Also Watch
Read this
By: Manigandan Raja

செங்கோட்டையன் வேட்புமனு தாக்கல் :
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதியில் தவெக சார்பில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார்
முன்னதாக தவெக ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் கோபி பேருந்து நிலையத்தில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மத்தியில் திறந்த வேனில் நின்றபடி ஊர்வலமாக வந்தார்.
அப்போது தினசரிசந்தையில் உள்ள பெரியாரின் சிலைக்கும், கச்சேரிமேட்டில் உள்ள எம்ஜிஆரின் சிலைக்கு மலை அணிவித்து விட்டு கோபி கோட்டாச்சியர் அலுவலகத்தில் மாவட்ட செயலாளர் பிரதீப்குமார் உள்ளிட்ட நான்கு பேருடன் தேர்தல் நடத்தும் அலுவலர் சிவானந்தம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
கடந்த எட்டுமுறை கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தவெக இணைந்து வேட்பாளராக அறிவிக்கப்பட்டு இன்று தொண்டர்கள் படையுடன் ஊர்வலமாக வந்து வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் :
தமிழக வெற்றி கழகம் சார்பில் தலைவர் விஜய் நேற்று 234 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் இதில் கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக தன்னை அறிவிக்கப்பட்டார்
இதனைத் தொடர்ந்து இன்று தவெக சார்பில் கோபிசெட்டிபாளையம் தொகுதியில் வேட்பாளராக போட்டியிட வேட்பு மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சத்தியமங்கலம் சட்டமன்றத் தொகுதி உட்பட கோபிசெட்டிபாளையத்தில் ஒன்பது முறை வெற்றி பெற்றுள்ளேன் இதை மக்கள் அளித்திருக்கும் கொடை என கருதுகிறேன் அதற்கு கோடான கோடி நன்றி என்றும்.
எதிர்கால தமிழகத்தை ஆளக்கூடிய வெற்றி தளபதி அனைத்து வேட்பாளர்களையும் வாழ்த்தி அனுப்பியுள்ளார் குறிப்பாக ஆண்ட கட்சியும் சரி ஆண்டு கொண்டிருப்பவர்களும் சரி மக்கள் ஒரு புதிய
இயக்கம் ஆள வேண்டும் என கருதுகிறார்கள் குறிப்பாக 50 ஆண்டு காலத்திற்குப் பிறகு தமிழகத்தில் ஒரு மாற்றம் வேண்டும் என விரும்புகிற காரணத்தினால் தனக்கு இருக்கும் புகழையும் வசதியை விட்டுவிட்டு
மக்களுக்கு பணியாற்ற அரசியலுக்கு வந்துள்ளார்.
ஆகவே தமிழக வெற்றி கழகத்தின் தலைவரை வெற்றி பெறச் செய்ய அனைத்து தரப்பு மக்களும் மற்றும் மேலை நாடுகளிலிருந்து வந்து வாக்களிக்க உள்ளனர் வெற்றி என்பது அவருடைய தலைமையில் உருவாகும் என மகிழ்ச்சியோடு தெரிவிப்பதாகவும் தன்னைப் பொறுத்தவரை மக்கள் என்றைக்கும் என்னை நேசிக்க கூடியவர்கள் நானும் மக்களை நேசிப்பேன் மக்கள் தீர்ப்பு மகேசன் தீர்ப்பு.
234 தொகுதிகளிலும் தமிழக வெற்றி கழகம் வெற்றி பெறும் மக்கள் சக்தி ஒன்று தண்டிருக்கிறது ஆட்சி அமைவதை யாராலும் தடுக்க முடியாது நிச்சயமாக தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் ஆட்சி அமையும் கோட்டையில் 2026 தேசிய கொடியை ஏற்றி வைப்பார்
எடப்பாடி பழனிச்சாமி கோபிசெட்டிபாளையம் பொதுக்கூட்டத்தில் பேசியபோது அதிமுகவின் கோபிசெட்டிபாளையம் தொகுதியில் வெற்றி பெற்று வெற்றி விழா கோபியில் நடைபெறும் என தெரிவித்தது குறித்து கேட்டபோது எடப்பாடி பழனிச்சாமியின் தொகுதியிலே அவர் களம் காண்பது என்பது நாளைதான் தெரியபோகிறது என்றார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved