Also Watch
Read this
By: Manigandan Raja

வேட்பாளராக களமிறங்கும் செல்லூர் ராஜு :
மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் நான்காவது முறையாக போட்டியிடும் முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜு மதுரை மாநகர் மாவட்ட அதிமுகவினருடைய இணைந்து மீண்டும் தமிழகத்தில் அதிமுக ஆட்சி அமைய வேண்டும் எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக வரவேண்டும் என்று உலக பிரசித்தி பெற்ற அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனை செய்தார்.
பிரார்த்தனைக்காக வில்வ இலை பூ மாலை வஸ்திரம் இவற்றோடு மேற்கு சட்டமன்ற தொகுதியில் தான் செய்த செயல் திட்டங்கள் உள்ளிட்டவைகள் அடங்கிய துண்டு பிரசுரம் உள்ளிட்டவைகளோடு மதுரை மாநகர் மாவட்ட கழக அதிமுகவினரோடு இணைந்து பிரார்த்தனை செய்தார்.
சிறப்பு பிரார்த்தனைக்குப் பிறகு அங்கே இருந்த தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு ஜிலேபி போன்ற இனிப்புகளை வழங்கி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதோடு செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்.
மீண்டும் தமிழகத்தில் மாபெரும் முதலமைச்சராக தமிழக மக்களின் நம்பிக்கை பெற்ற ஒரு முதலமைச்சராக தமிழக மக்களுடைய தேவைகளை நிறைவேற்றக் கூடியவராக தமிழகத்தில் சிறப்பான சட்டம் ஒழுங்கு அமைதியான மாநிலம் விலைவாசி குறைத்தல் போதை இல்லா தமிழ்நாடு என்ற தமிழகத்தை முன்னெடுத்து செல்லக்கூடிய.
தமிழகத்திற்கு வளர்ச்சி பணிகளை கொடுக்கக்கூடிய புரட்சித்தமிழர் எடப்பாடியார் தலைமையில் மீண்டும் அதிமுக ஆட்சியில் அமர்ந்து தமிழக மக்களுக்கு எல்லா வகையிலும் உதவி செய்யும் என்பதை இந்த நேரத்தில் அருள் புரிய வேண்டும் என்று அருள்மிகு மீனாட்சியை சுந்தரேஸ்வரர் இருவரையும் வணங்கி வந்திருக்கின்றோம்.
மதுரையினுடைய தந்தை தாயாக இருக்கக்கூடிய மீனாட்சி சுந்தரேஸ்வரரை வணங்கி தற்போது ஆரம்பித்திருக்கின்றோம் தமிழகத்தில் இபிஎஸ் முதல்வராக வரவேண்டும் அதிமுக ஆட்சி அமைய வேண்டும்
என்பதற்காக இன்று மதுரை மாநகர் மாவட்ட நிர்வாகிகள் சார்பில் சிறப்பு பிரார்த்தனை செய்திருக்கின்றோம்.
தேர்தல் வாக்குறுதியாக திமுக அறிவித்திருந்த கேள்விக்கு ?.?. அதிமுகவிற்கு போட்டியாக தான் திமுகவினர் தேர்தல் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்கள்
மக்கள் மத்தியில் எடப்பாடி யார் சொல்வதை செய்வார் செய்வதத்தான் சொல்லுவார் என்பது மக்களுக்கு தெரியும் எனவே மாண்புமிகு முதலமைச்சராக இபிஎஸ் மீண்டும் தமிழகத்தில் வெற்றி வளம் வருவார் என்பதற்கு அவருடைய தேர்தல் அறிக்கையை மிகப்பெரிய வெற்றி பெற்றதற்கான உதாரணம்.
கதாநாயகனாக தமிழக தேர்தல் அறிக்கையில் யார் எப்படிப்பட்ட கொடுத்தாலும் அதெல்லாம் தோல்வி பெறும் அதிமுக தலைமையில் அமைந்திருக்கக்கூடிய தேசிய ஜனநாயக கூட்டணி மாபெரும் வெற்றி பெறும்
அதற்கு இபிஎஸ் அவர்கள் ஹீரோவாக தமிழகத்தில் வலம் வருவார்
அவருடைய தேர்தல் அறிக்கையில் ஏற்கனவே மக்கள் மத்தியில் கொண்டு சென்று விட்டார்கள் மக்கள் அனைவரும் ஒரு முகமாக வரவேற்கிறார்கள் ஒவ்வொரு வேட்பாளரும் அவர்களுடைய கருத்துக்களை வலியுறுத்துவது வழக்கம் இது வழக்கமான ஒன்று அவர்களுக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது என்று சொல்லுவது வழக்கமான ஒன்று.
அந்த வகையில் தம்பி சொல்லி இருப்பார் எனவே மக்கள் தான் எஜமானர்கள் மக்கள் பார்த்து முடிவு எடுப்பார்கள்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved