Also Watch
Read this
By: Manigandan Raja

சிலிண்டர் தட்டுப்பாடு :
மேற்கு ஆசிய போர் சூழல் காரணமாக சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு என்பது நாடு தொடர்ந்து நீடித்து வருகிறது.வணிக சிலிண்டர்களின் தட்டுபாடுகள் நிலவி ஒருபுறம் வியாபாரிகள்,வணிகர்கள் கடும் சிரமங்களுக்கு ஆளாகி அவர்களாகவே அதற்கேற்ப அடுப்பு போன்ற மாற்று பயன்பாட்டு முறைகளுக்கு மாறி வரும் நிலையில் வீட்டு உபயோக சிலிண்டர்களுக்கு விண்ணப்பித்தால்.
அவை கிடைக்க பெறுவதில் சிக்கல் நிலை நீடித்து வருகிறது. இந்த நிலையில் காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அடுத்த ஊத்துக்காடு பகுதியில் உள்ள தனியார் கேஸ் குடோனில் தொடர்ச்சியாக பொதுமக்கள் கேஸ் சிலிண்டர் விண்ணப்பித்து நேரடி கேஸ் சிலிண்டர்களை பெற நேரில் சென்று அணுகி வருவது குறித்து தொடர்ச்சியாக செய்திகளை பதிவிட்டு வருகின்றனர்.
இந்த சூழலில் காஞ்சிபுரம் பழைய ரயில்வே நிலையம் அருகிலுள்ள கேஸ் குடோன் முன்பு, பொதுமக்கள் காலி சிலிண்டர்களுடன் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்கின்றனர். அன்றாட பணிகளை விட்டு நேரம் ஒதுக்கி சிலிண்டர் பெற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும், காலி சிலிண்டரை ஒப்படைத்து, நிரப்பப்பட்ட சிலிண்டர்களை மக்களே எடுத்துச் செல்லும் சூழல் காணப்படுவதால், வீடுகளுக்கு நேரடியாக விநியோகிக்கும் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved