news-tamil-logo

3/15/2026, 11:34:41 AM

news-tamil-logo
more
Home districtnews டீசலை மனைவி மீது கொப்பளித்து கொடூரம்
tv

Also Watch

tv

Read this

டீசலை மனைவி மீது கொப்பளித்து கொடூரம்

கபிஸ்தலம், தஞ்சாவூர்

Posted on: Feb 11, 2026 10:04 AM

27

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

வாயில் டீசலை வைத்து, அதனை கொப்பளித்தும், கேனில் இருந்த டீசலை ஊற்றியும் மனைவியை கொளுத்திய கணவன். பொதுமக்கள் நடமாடும் இடத்திலேயே நடந்த பயங்கரம். சைக்கோ கணவனை அடித்து உதைத்து போலீசில் ஒப்படைத்த பொதுமக்கள். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மனைவி உயிரிழந்ததால் கணவன் மீது பாய்ந்த கொலை வழக்கு. மனைவியை கணவன் கொளுத்தியது ஏன்? மூர்க்கத்தனத்திற்கு என்ன காரணம்?

பெண் மீது டீசலை ஊற்றி நெருப்பை பற்ற வைத்த கொடூரம்
நைட் 8 மணிக்குமேல ரோட்டுல ஒரு பொண்ணு நடந்து வந்துட்டு இருந்துருக்காங்க. அப்போ, எதிர்ல வந்த ஒருத்தரு, தன் வாயில இருந்த டீசலை அந்த பொண்ணுமேல கொப்பளிச்சதோட, கையில கேன்ல வச்சிருந்த டீசலையும் ஊத்தி தீக்குச்சிய பத்தவச்சி வீசிருக்காரு. தன்மேல நெருப்பு பத்தி எரிஞ்சதும் வலி தாங்க முடியாம சாலையில படுத்து உருண்டுருக்காங்க அந்த பொண்ணு. இதப்பாத்த பொதுமக்கள் அந்த பொண்ண மீட்டு ஆம்புலன்ஸ்ல மருத்துவமனைக்கு அனுப்பி வச்சதோட, டீசலை ஊத்தி நெருப்ப பத்த வச்ச நபரையும் அடிச்சி உதைச்சி போலீசுக்கு தகவல் குடுத்துருக்காங்க. அடுத்த கொஞ்ச நேரத்துல அங்க வந்த போலீசார், தலையில ரத்தம் சொட்ட சொட்ட இருந்த அந்த நபரை மீட்டு விசாரணை நடத்துனப்ப தான் அந்த நபரும், அந்த பெண்ணும் கணவன், மனைவி அப்டிங்குறதே தெரியவந்துச்சு.

மனைவி வர மறுத்ததால் சைக்கோவாக மாறிய கணவன் ராஜ்குமார்
தஞ்சாவூர், கீழவாசல் பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார். 40 வயசான இவருக்கும் 34 வயசான வினோதினிக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னால கல்யாணமாகி ரெண்டு பிள்ளைகள் இருக்காங்க. இதுக்கு மத்தியில மது குடிச்சிட்டு வந்து தினமும் மனைவிய அடிச்சி சித்ரவதை பண்ணிருக்காரு கணவன். பிள்ளைகளுக்காக பலநாளா கொடுமைய தாங்கிக் கிட்டவங்க, ஒருகட்டத்துல ரெண்டு பிள்ளைகளையும் அழைச்சிட்டு பாபநாசத்துல உள்ள தன்னோட தாய் வீட்டுக்கே போய்ட்டாங்க வினோதினி. கபிஸ்தலத்துல உள்ள ஒரு டீக்கடையில வேலைக்கு சேந்து, அதுல வர்ற பணம் மூலமா தன்னோட பிள்ளைகளை படிக்க வச்சிருக்காங்க மனைவி. பலமுறை கடைக்குப்போன ராஜ்குமார், தன்னோட சேர்ந்து வாழ வான்னு அழைச்சிருக்காரு. ஆனா, தினமும் உங்ககிட்ட அடிவாங்கி அழுது சாகுறதவிட பிரிஞ்சி இருக்குறதே மேல்னு சொன்ன வினோதினி கணவனோட போக மறுத்துருக்காங்க. அதுதான், கணவனை சைக்கோவா மாத்திருக்கு.

டீசலை மனைவி மீது ஊற்றி நெருப்பை பற்ற வைத்த கணவன்
கடந்த ஜனவரி மாசம் 28ஆம் தேதி டீக்கடையில வேலை முடிஞ்சி வழக்கம்போல கும்பகோணம் - திருவையாறு தேசிய நெடுஞ்சாலையில வீட்டுக்கு நடந்து போயிட்டு இருந்துருக்காங்க வினோதினி. அப்போ, எதிர்ல கையில பெட்ரோல் கேனோட வந்துருக்கான் அவங்க கணவன். அதுமட்டுமில்லாம வாயிலயும் டீசலை வச்சிட்டு வந்துருக்கான். அடுத்து, வாயில இருந்த டீசலை மனைவிமேல கொப்பளிச்சதோட கேன்ல இருந்த டீசலையும் ஊத்தி தீக்குச்சியை பத்தவச்சி வீசிருக்கான். இத எதிர்பாக்காத மனைவி உடம்புல நெருப்பு பத்தி எரிஞ்சபடி சாலையில படுத்து உருண்டுருக்காங்க. இந்த சம்பவத்த பாத்து அதிர்ச்சியான அவ்வழியா போன மக்கள் ராஜ்குமாரை சுத்திவளைச்சி பிடிச்சி வெளுத்துருக்காங்க. அதுல ரத்தம் சொட்ட சொட்ட நடுரோட்ல இருந்த அவனை போலீஸ்ல ஒப்படைச்சிருக்காங்க.

சிறையில் கம்பி எண்ணும் கணவன்
முகம், கை, கால்கள்ல தீக்காயம் ஏற்பட்டு ஆபத்தான நிலையில கும்பகோணம் கவர்மெண்ட் ஹாஸ்பிட்டல்ல சிகிச்சையில இருந்த வினோதினிய மருத்துவர்கள் தஞ்சை கவர்மெண்ட் ஹாஸ்பிட்டலுக்கு மேல்சிகிச்சைக்காக அனுப்பி வச்சாங்க . ரெண்டு வாரமா மருத்துவர்களோட கண்காணிப்புல இருந்த வினோதினி சிகிச்சையில முன்னேற்றம் இல்லாததால உயிரிழந்துட்டாங்க. கொலை முயற்சி வழக்குல கைது செய்யப்பட்ட ராஜ்குமார் மேல இப்ப கொலை வழக்கு பாஞ்சிருக்கு.

Related Link
அமைச்சர் மூர்த்திக்கு எதிராக திரும்பிய மதுரை மக்கள்

அமைச்சர் மூர்த்திக்கு எதிராக திரும்பிய மதுரை மக்கள்

              

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நாடே ஆவலுடன் எதிர்பார்த்த நாள் அறிவிப்பு

0
12 mins agoshare
Election Daybutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved