news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews தவறான பூச்சிகொல்லியை பயன்படுத்தியதால் வெங்காய பயிர்கள் சேதம்
tv

Also Watch

தவறான பூச்சிகொல்லியை பயன்படுத்தியதால் வெங்காய பயிர்கள் சேதம்

ஆயிக்கவுண்டன்புதூர், கோவை

47

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
CBE Paddy issue

கோவை மாவட்டம் அன்னூர் அருகே ஆயிக்கவுன்டன்புதூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி முருகசாமி இவர் தனது தோட்டத்தில் வாழைக்கு ஊடுபயிராக வெங்காயம் விவசாயம்
செய்து வந்துள்ளார்

10 ஏக்கர் பரப்பளவில் விவசாயம் செய்துள்ள வெங்காயத்தில் திடீரென நோய் தொற்று ஏற்பட்டதன் காரணமாக பயிர்கள் லேசாக சுணங்கி வளர்ந்துள்ளது நுனிக்கருகல் என்ற
நோய் தாக்கம் காரணமாக பயிர்கள் வளர்ச்சி பாதிப்பு ஏற்பட்ட நிலையில் அதற்காக ஈரோடு மாவட்டம் புளியம்பட்டியில் உள்ள பண்ணாரி அம்மன் டிரேடர்ஸ் என்ற தனியார்
மருந்து கடையில் மருந்து வாங்கி தெளித்துள்ளார்

அதன் பிறகு வெங்காயம் முழுவதுமாக கருகி பயிர்கள் செத்துவிட்டன இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் அது குறித்து கோவை வேளாண்மை அதிகாரிகளுக்கு தகவல்
அளித்து விட்டு சம்பந்தப்பட்ட மருந்து கடைக்கு சென்று கேட்ட போதும் உரிய பதில் அளிக்கவில்லை என கூறப்படுகிறது.

மேலும் அதிகாரிகளும் வெங்காய மாதிரிகளை எடுத்துச் சென்று ஆய்வு செய்வதாக கூறிவிட்டு சென்றவர்கள் இதுவரை எந்த பதிலும் அளிக்காமல் இருந்து வருகின்றனர் இது குறித்து ஆய்வகத்திற்கு அனுப்ப பட்டதாக கூறி பத்துநாள் ஆகியும் இதுவரை பதில் அளிக்கவில்லை.

எனவே அரசு சம்பந்தப்பட்ட கடை மீதும் நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீதும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அரசு உரிய இழப்பீடு பெற்று தர வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.

Related Link
துவரங்குறிச்சி அருகே பள்ளி மாணவிகள் சாலை மறியல்

துவரங்குறிச்சி அருகே பள்ளி மாணவிகள் சாலை மறியல்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பகத் பாசில் நடித்துள்ள டோண்ட் டிரபிள் தி டிரபிள் படம்

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved