Also Watch
Read this
By: Web Team

தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு வரும் ஆகஸ்ட் 25ஆம் தேதி மதுரையில் நடைபெற உள்ள நிலையில், பொதுச் செயலாளர் என்.ஆனந்த் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் மற்றும் தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
சென்னை பனையூரில் நடைபெற்ற பயிற்சி பட்டறை கூட்டத்தில், தவெக தலைவர் விஜய் வெளியிடவிருக்கும் உறுப்பினர் சேர்க்கை செயலியை பயன்படுத்தி எவ்வாறு உறுப்பினர் சேர்க்கை மேற்கொள்ள வேண்டும் என பயிற்சி வழங்கப்பட்டது.
350 க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் பங்கேற்ற நிலையில், அனைவரது செல்போன்களும் வெளியிலேயே வாங்கி வைக்கப்பட்டது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved