Also Watch
Read this
By: Fyrose Banu

கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே பின்னலூர் கிராமத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற செல்லியம்மன் ஆலயத்தின் ஆடி மாத பிரம்மோற்சவ விழா கடந்த மாதம் கொடியேற்றத்துடன் துவங்கியது. செல்லியம்மன் நாள்தோறும் சிம்ம வாகனத்தில் பல்வேறு கோலங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இந்த நிலையில் ஏழாம் நாள் திருவிழாவில் பக்தர்கள் ஏராளமானோ பச்சைக்காளி வெக்காளி உதித்த காளி வேடங்களை அணிந்தும் 18ம் படி கருப்பண்ண சுவாமி போல் கருப்பசாமி வேடமணிந்தும் உறுமி மேளங்களுக்கு ஏற்ப உற்சாக நடனம் ஆடி நேர்த்திக்கடன்களை செலுத்தினர். மேலும் கருப்புசாமி கையில் கத்தியுடன் மற்றொரு கையில் தீச்சட்டி ஏந்தி கொண்டு ஆவேசத்துடன் சுருட்டு குடித்தபடி நடனமாடியது பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்தது.

மேலும் கோழியை கடித்து ஆவேசத்துடன் கருப்புசாமி வேடமிட்ட நபர் நடனமாடியது பார்ப்பவரை பக்தி பரவசத்தில் வாழ்த்தியது மேலும் எட்டு கைகளுடன் காலி வேடம் அணிந்து தீப்பொறிகள் கிளம்ப நடனம் ஆடியது பக்தர்களை பிரமிப்படைய செய்தது. அதனைத் தொடர்ந்து செல்லியம்மன் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு வீதி வீதியாக சென்று அருள் பாலித்தார் இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று செல்லியம்மனை மனமுருக வழிபாடு செய்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved